வாஷிங்டன்; அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசுக்கு அமெரிக்கவாழ் இந்தியர்களின் ஆதரவைப் பெற்றுத் தர பாலிவுட் பாடல்களை பாடி இந்திய வம்சாவளி தொழிலதிபர் பிரசாரம் செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அவரும் துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிசும் ஜனவரியில் பதவி ஏற்க உள்ளனர்.
இந்த தேர்தலில் அமெரிக்கவாழ் இந்தியர்களின் ஆதரவை பெற பைடன் - ஹாரிஸ் பிரசார குழுவினர் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.அதன்படி அஜய் ஜெயின் புட்டோரியா என்ற இந்திய வம்சாவளி தொழிலதிபர் பிரபலமான பாலிவுட் பாடல்களை பாடி ஓட்டு சேகரித்துள்ளார்.
இது குறித்து புட்டோரியா நேற்று கூறியதாவது:

அமெரிக்கவாழ் இந்தியர்களிடம் அவர்களுக்கு புரியும் மொழியில் பிரசாரம் செய்தால் கேட்க தயாராக இருப்பர் என்பதை முழுமையாக நம்பினேன். அவர்களது தாய் மொழியில் நாம் பேசினால் அது அவர்களை ஈர்க்கும்.
அதை கருத்தில் வைத்து பாலிவுட் பாடல்களை பாடி பிரசாரம் செய்தோம். பைடன் மற்றும் ஹாரிசுக்கு ஆதரவு கேட்கும் கோஷங்கள் ஹிந்தி உட்பட 14 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன. அந்த வரிகளை வைத்து பாடல்கள் உருவாக்கப்பட்டு 'வீடியோ' வெளியிடப்பட்டது. எங்கள் பிரசார முறை பயன் அளித்துள்ளது மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE