பொது செய்தி

இந்தியா

இப்படித் தான், தி.மு.க.,வினர் சொன்னார்கள். நடந்தது வேறு விதமாக இருந்தது.

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
கரூர் மாவட்டத்தில், நான்கு தொகுதிகளிலும், தி.மு.க., வெற்றி பெறும். வரும் மே மாதம், ஸ்டாலின் முதல்வர் ஆவதை, ஆயிரம் எடப்பாடிகள் வந்தாலும் தடுக்க முடியாது.- தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி'இப்படித் தான், கடந்த தேர்தலிலும், தி.மு.க.,வினர் சொன்னார்கள். நடந்தது வேறு விதமாக அல்லவா இருந்தது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி பேட்டி.ஒரு
இப்படித் தான், தி.மு.க.,வினர் சொன்னார்கள். நடந்தது வேறு விதமாக இருந்தது.

கரூர் மாவட்டத்தில், நான்கு தொகுதிகளிலும், தி.மு.க., வெற்றி பெறும். வரும் மே மாதம், ஸ்டாலின் முதல்வர் ஆவதை, ஆயிரம் எடப்பாடிகள் வந்தாலும் தடுக்க முடியாது.
- தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி


'இப்படித் தான், கடந்த தேர்தலிலும், தி.மு.க.,வினர் சொன்னார்கள். நடந்தது வேறு விதமாக அல்லவா இருந்தது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி பேட்டி.



ஒரு காலத்தில், சென்னை துறைமுகத்தில், இரும்பு தாது கையாண்டபோது, சுற்று வட்டாரங்கள் சிவப்பாகி விடும்; நிலக்கரியை கையாளும் போது கறுப்பாகி விடும். தற்போது, ராயபுரத்தில் கறுப்பு, சிவப்பிற்கு இடமில்லாமல் போய்விட்டது. நான் எதை குறிப்பிடுகிறேன் என, புரிந்துக் கொண்டிருப்பீர்கள்.
- அமைச்சர் ஜெயகுமார்


'நீங்கள் தி.மு.க.,வைத் தான் குறிப்பிடுகிறீர்கள் என்பது, அனைவருக்கும் தெளிவாக புரிந்திருக்கும். ஏனெனில், அந்த இரண்டு நிறத்திற்கும் சொந்தக்காரர்கள் அவர்கள் தானே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் பேட்டி.



சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை ஆட்சி அமைக்காமல் தடுப்பதே, பா.ஜ.,வின் இலக்கு. அழகிரி தனிக்கட்சி ஆரம்பித்தால், பா.ஜ., வரவேற்கும். அரசியல், கொள்கை, சிந்தாந்த ரீதியாக எங்களுக்கு எதிராக இருக்கும் கட்சி, தி.மு.க.,. கடந்த தேர்தலில், தி.மு.க., தோல்விக்கு காங்., தான் காரணம்.
- பா.ஜ., மாநில பொதுச் செயலர் சீனிவாசன்


'அப்போ, பா.ஜ., தலைமையில், மாநிலத்தில் ஆட்சி அமையாதா...' என, அப்பாவித்தனமாக கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில பொதுச் செயலர் சீனிவாசன் பேட்டி.



அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில், 7.5 சதவீத ஒதுக்கீடு அமல்படுத்திய தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம். ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பு உள்ளிட்ட உயர் கல்வி பயில அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியது.
- த.மா.கா., தலைவர் வாசன்


'கடந்த ஆண்டில், நான்கைந்து இடங்கள் மட்டுமே பெற்ற, அரசு பள்ளி மாணவர்கள், இதனால், இந்த ஆண்டு, 450 இடங்களுக்கு மேல் பெற்றுள்ளனராம்...' என, கூறத் தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி.



தமிழகத்தில் ஜனநாயக படுகொலை ஆட்சி நடக்கிறது. அமைச்சர்கள் நடத்தும் கூட்டங்களில் யாரும், எதுவும் செய்வதில்லை. அந்த நிகழ்ச்சிகளில் பணம் கொடுத்து பொதுமக்களை கூட்டங்களுக்கு அழைத்து வருகின்றனர். அந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஆளும்கட்சியினர் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை.
- தி.மு.க., துணை பொதுச் செயலர் பொன்முடி


'உங்கள் கட்சியினரைக் கைது செய்தால், ஜனநாயக படுகொலை... நல்லா இருக்குது சார் உங்கள் நியாயம்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., துணை பொதுச் செயலர் பொன்முடி பேட்டி.



நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, அதிகவேகத்தில் செல்லும் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, 'கேமரா'க்கள் பொருத்துவதில் முறைகேடுகள் நடந்தால், அது, மக்களின் உயிரோடு விளையாடும் செயலாகும். எனவே, டெண்டரில் விதிமீறல் நடந்திருப்பதாக எழுந்திருக்கும் புகார் குறித்து, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து, விசாரணை நடத்த வேண்டும்.
- அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்


latest tamil news





'உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தினால், பல கட்சித் தலைவர்களின் டப்பா டான்ஸ் ஆடிவிடுமே...' என, பதிலடி கொடுக்கத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை.



அரசு உதவி பெறும் பள்ளிகள் எல்லாம் தனியார் பள்ளிகள் என்பது போன்ற, புதிய அரிய கண்டுபிடிப்புகளை சமீபகாலமாக வெளியிட்டு வரும் முதல்வர், இனியாவது அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு, 7.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது ஏன் என்பதற்கான காரணத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
- தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு


'இது தான், தி.மு.க.,வின் விதண்டாவாதம் என்பதை, தமிழக மக்கள் நன்கு அறிந்துள்ளனர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை.



தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில், மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எதிராக தொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது, மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர், கர்நாடக மாநில நீர்த் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்போம் என, தெரிவித்து இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
- ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ


'கர்நாடகாவில் பேட்டி கொடுக்கும் போது அப்படி சொல்லியிருப்பார். தமிழகம் வந்தால், இங்கிருப்போருக்கு ஆதரவாக பேட்டியளிப்பார். அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே...' என, சொல்லத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை.



சபரிமலை அய்யப்ப பக்தர்களுக்கு கொரோனாவை காரணம் காட்டி கேரள அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் தேவசம்போர்டு, பல கட்டுப்பாடுகளை விதித்து சிரமப்படுத்துகிறது. தேவையில்லாத கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்.
- ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்


'கேரளாவில், கோவில்களுக்கு எதிரான கம்யூ.,க்கள் ஆட்சி நடக்கிறது. அதனால், அய்யப்பன் கோவிலின் பாரம்பரியத்தை கெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி.



கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க, அரசு நடவடிக்கை எடுத்தாலும், எந்த மாற்றமும் இன்றி, ஆக்கிரமிப்பு தொடர்கிறது.
- தமிழக கோவில் பூசாரிகள் நலச்சங்க மாநில தலைவர் வாசு


'கோவில் நிலங்களை காக்க, தனி தன்னார்வலர்கள் குழு அமைத்து, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்க, அதிரடிப்படையை உருவாக்க வேண்டும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக கோவில் பூசாரிகள் நலச்சங்க மாநில தலைவர் வாசு பேட்டி.


Advertisement


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
22-நவ-202021:27:45 IST Report Abuse
S. Narayanan தி மு க வுக்கு ஆப்பு எப்போவோ வைத்தாயிற்று
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
22-நவ-202020:23:00 IST Report Abuse
r.sundaram பி ஜெ பி தலைவர்கள் கள நிலைமையை நன்கு அறிந்தவர்கள், ஆதலால் எண்கள் தலைமையில் ஆட்சி தமிழகத்தில் நடக்கும் என்று இப்போது சொல்ல மாட்டார்கள்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-நவ-202017:36:54 IST Report Abuse
J.V. Iyer கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு-திராவிஷ கட்சிகள். இரண்டும் பிரிக்க முடியாதவை. சரிதானே
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
26-நவ-202007:07:31 IST Report Abuse
madhavan rajanகொள்ளை அடிக்க எங்கே வாய்ப்பு கிடைத்தாலும் அதை திறமையாக செயல்படுத்திக் கொள்வதில் அந்தக் கட்சிகளை யாரும் மிஞ்ச முடியாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X