சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஷ காளானை சாப்பிட்ட சிறுவர்கள் வாந்தி, மயக்கம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
அரூர்: அரூர் அருகே, விஷ காளானை சாப்பிட்டதில், வாந்தி, மயக்கம் ஏற்பட்ட, நான்கு சிறுவர்கள் நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கட்டரசம்பட்டியை சேர்ந்த, தர்ஷினி, 14, திருமலை, 10, ஸ்ரீராம், 10, நிகிலேஷ், 4 ஆகிய, நான்கு பேரும், நேற்று மதியம், அப்பகுதியில் உள்ள நெல் வயல் அருகில், முளைத்திருந்த விஷ காளானை பறித்து சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

அரூர்: அரூர் அருகே, விஷ காளானை சாப்பிட்டதில், வாந்தி, மயக்கம் ஏற்பட்ட, நான்கு சிறுவர்கள் நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கட்டரசம்பட்டியை சேர்ந்த, தர்ஷினி, 14, திருமலை, 10, ஸ்ரீராம், 10, நிகிலேஷ், 4 ஆகிய, நான்கு பேரும், நேற்று மதியம், அப்பகுதியில் உள்ள நெல் வயல் அருகில், முளைத்திருந்த விஷ காளானை பறித்து சமைத்து சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில், இரவு, 7:00 மணிக்கு, நான்கு பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களை தீர்த்தமலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு, அவர்களது பெற்றோர் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X