சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சைக்கிள் மீது பைக் மோதல்: முதியவர் பலி

Added : நவ 22, 2020
Share
Advertisement
அதியமான்கோட்டை: சைக்கிள் மீது, பைக் மோதியதில் முதியவர் பலியானார். தர்மபுரி அடுத்த ஏ.ஜெட்டிஹள்ளியை சேர்ந்தவர் வீரபத்திரன், 70. இவர், நேற்று முன்தினம், ஏ.ஜெட்டிஹள்ளியில் இருந்து அதியமான்கோட்டைக்கு, சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக நல்லம்பள்ளி அடுத்த குரும்பட்டியை சேர்ந்த முத்து, 35 என்பவர், தர்மபுரி நோக்கி பைக்கில் வந்தார். அதியமான்கோட்டை கூட்டு ரோடு அருகே வந்த

அதியமான்கோட்டை: சைக்கிள் மீது, பைக் மோதியதில் முதியவர் பலியானார். தர்மபுரி அடுத்த ஏ.ஜெட்டிஹள்ளியை சேர்ந்தவர் வீரபத்திரன், 70. இவர், நேற்று முன்தினம், ஏ.ஜெட்டிஹள்ளியில் இருந்து அதியமான்கோட்டைக்கு, சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக நல்லம்பள்ளி அடுத்த குரும்பட்டியை சேர்ந்த முத்து, 35 என்பவர், தர்மபுரி நோக்கி பைக்கில் வந்தார். அதியமான்கோட்டை கூட்டு ரோடு அருகே வந்த பைக், சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வீரபத்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த முத்துவை அப்பகுதியினர் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X