சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏட்டு தற்கொலை முயற்சி? மருத்துவமனையில் அனுமதி

Added : நவ 22, 2020
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு, தற்கொலைக்கு முயன்றதாக கூறி, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் போலீஸ் ஸ்டேஷனில், தலைமை காவலராக பணியாற்றி வருபவர் மாதேவன், 51. நேற்று முன்தினம் இரவு, கெலமங்கலத்தில் உள்ள வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை, உறவினர்கள் மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குடும்ப

ஓசூர்: ஓசூர் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு, தற்கொலைக்கு முயன்றதாக கூறி, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் போலீஸ் ஸ்டேஷனில், தலைமை காவலராக பணியாற்றி வருபவர் மாதேவன், 51. நேற்று முன்தினம் இரவு, கெலமங்கலத்தில் உள்ள வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை, உறவினர்கள் மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குடும்ப பிரச்னையால் அவர், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. இதை மறுத்த ஓசூர் போலீசார், அவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், நேற்று காலை அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இது தொடர்பாக, கெலமங்கலம் போலீசில் புகார் ஏதும் வரவில்லை என்பதால், வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X