சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானை பலி சம்பவத்தில் மேலும் ஒரு விவசாயி கைது

Added : நவ 22, 2020
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் வனச்சரகத்தில், மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது தொடர்பாக, மேலும் ஒரு விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார்.ஓசூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட ஊடேதுர்க்கம் காப்புக்காடு அருகே, கவிபுரம் கிராமத்தில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை, கடந்த, 15ல் காலை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. கால்நடை மருத்துவ குழுவினர் உதவியுடன் நடத்திய பிரேத பரிசோதனையில், மின்சாரம் தாக்கி

ஓசூர்: ஓசூர் வனச்சரகத்தில், மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது தொடர்பாக, மேலும் ஒரு விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார்.


ஓசூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட ஊடேதுர்க்கம் காப்புக்காடு அருகே, கவிபுரம் கிராமத்தில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை, கடந்த, 15ல் காலை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. கால்நடை மருத்துவ குழுவினர் உதவியுடன் நடத்திய பிரேத பரிசோதனையில், மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்தது தெரிந்தது. இதையடுத்து, வனத்துறையினர் விசாரணையில், விலங்குகளை வேட்டையாடும் நோக்கில், கவிபுரத்தை சேர்ந்த விவசாயிகள் நாராயணப்பா, 45, வெங்கடேசப்பா, 60, ஆகியோர் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி, யானை உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து, வெங்கடேசப்பாவை கடந்த, 16ல், வனத்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த நாராயணப்பா, கர்நாடகா மாநிலம், பெங்களூரு அடுத்த ஒசகோட்டாவில் பதுங்கியிருப்பது தெரிந்து, அங்கு சென்று, நேற்று அவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X