பொது செய்தி

தமிழ்நாடு

துவரையில் அதிக மகசூல் பெற நவீன தொழில்நுட்ப யோசனை

Added : நவ 22, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: நவீன தொழில்நுட்பங்கள் மூலம், மானாவாரி துவரையில் அதிக மகசூல் பெறலாம் என, வேளாண் உதவி இயக்குனர் முருகன் அறிவுரை வழங்கி உள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது: நடப்பு பருவத்தில், துவரை பூக்கும் தருணத்தில் உள்ளது. விவசாயிகள் இப்போது பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்களாக, பூக்கும் தருணத்தில், 2 சதவீதம் டீ.ஏ.பி., கரைசல் தெளிக்க வேண்டும். தெளிப்பதற்கு ஒருநாள் முன்னரே,

கிருஷ்ணகிரி: நவீன தொழில்நுட்பங்கள் மூலம், மானாவாரி துவரையில் அதிக மகசூல் பெறலாம் என, வேளாண் உதவி இயக்குனர் முருகன் அறிவுரை வழங்கி உள்ளார்.


இது குறித்து அவர் கூறியதாவது: நடப்பு பருவத்தில், துவரை பூக்கும் தருணத்தில் உள்ளது. விவசாயிகள் இப்போது பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்களாக, பூக்கும் தருணத்தில், 2 சதவீதம் டீ.ஏ.பி., கரைசல் தெளிக்க வேண்டும். தெளிப்பதற்கு ஒருநாள் முன்னரே, ஒரு ஏக்கருக்கு தேவையான, 4 கிலோ டி.ஏ.பி.,யை, 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து, 24 மணி நேரம் ஊற வைக்கவும். பின் மறுநாள் டி.ஏ.பி., கரைசலின் படிவுகள், திப்பிகள் ஏதுமின்றி, நன்கு தெளிந்த நீர் மட்டும் வடிகட்டி அதை, 190 லி., நீரில் கலந்து, ஒரு ஏக்கருக்கு, 200 லி., மாலை வேளைகளில் மட்டும் தெளிக்க வேண்டும். இல்லையெனில், பயிர்கள் கருகும் அபாய நிலை ஏற்படும். 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை தெளிப்பதன் மூலம், பூ உதிர்வது தவிர்க்கப்படுவதோடு, அதிக திரட்சியான காய்கள் மற்றும் மணிகள் உருவாகும். எனவே, 20 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெறலாம். காய்ப்புழுவை கட்டுப்படுத்த ஏக்கருக்கு அசாடிராக்டின், 0.03 சதவீதம் ஙிகுக-1 கிலோ என்ற அளவில், மருந்தை கலந்து தெளிக்கலாம். நோய் தாக்குதல், பொருளாதார சேத நிலையை ஏற்படுத்துவதில்லை. மேலும், தாக்குதலுக்கு ஏற்ற மேலாண்மை முறைகளுக்கு, தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, சிறிய மற்றும் எளிய தொழில்நுட்பங்களை சீராக பின்பற்றுவதன் மூலம், மானாவாரி துவரையில் ஏக்கருக்கு சாதாரணமாக, 550 முதல், 600 கிலோ வரை மகசூல் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X