பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு முகாமில் பெற்ற படிவங்களை வீடு வீடாக ஆய்வு நடத்த அறிவுரை

Added : நவ 22, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களிடம் இருந்து பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்ற படிவங்களை பெற்று, வீடு, வீடாக சென்று ஆய்வு செய்ய வேண்டும் என, சிறப்பு பார்வையாளர் அறிவுறுத்தினார்.கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர், ஜெயசந்திரபானு

கிருஷ்ணகிரி: வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களிடம் இருந்து பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்ற படிவங்களை பெற்று, வீடு, வீடாக சென்று ஆய்வு செய்ய வேண்டும் என, சிறப்பு பார்வையாளர் அறிவுறுத்தினார்.


கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர், ஜெயசந்திரபானு ரெட்டி முன்னிலை வகித்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளரும், பால் வளர்ச்சி மற்றும் பால் உற்பத்தி இயக்குனருமான, வள்ளலார் தலைமை வகித்து பேசியதாவது: அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போதுமான படிவங்கள் உள்ளதா என உறுதி செய்ய வேண்டும். 2003 ஜன.,1க்கு முன் பிறந்தவர்களை, வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும். ஆதார் அட்டை, மாற்றுச்சான்றிதழ், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை வாக்குச்சாவடி அலுவலர்களிடம் அளித்து, படிவம், 6ஐ பூர்த்தி செய்து, வாக்காளர் தங்களது பெயரை பட்டியலில் சேர்த்து கொள்ளலாம். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களிடம் இருந்து பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட படிவங்களை பெற்று, வீடு, வீடாக சென்று ஆய்வு செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். மாவட்ட எஸ்.பி., பண்டிகங்காதர், டி.ஆர்.ஓ., சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரகுகுமார், ஆர்.டி.ஓ.,க்கள் குணசேகரன், கற்பகவள்ளி, துணை கலெக்டர் (பயிற்சி) அபிநயா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X