சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல், மஞ்சள், வாழையை நாசம் செய்த யானை கூட்டம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
குடியாத்தம்: குடியாத்தம் அருகே, நெல் பயிர்களை நாசம் செய்து, பள்ளி சுவரை, யானை கூட்டம் இடித்து தள்ளியதால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே தமிழக - ஆந்திரா மாநில எல்லையிலுள்ள கொட்டாரமடுகு, ஜிட்டபள்ளி, மோர்த்தானா, அனுப்பு, கொட்டமிட்டா, பரதராமி, ரங்கசமுத்திரம் உள்ளிட்ட, 25 கிராமங்கள், தமிழக - ஆந்திரா மாநில எல்லையில் உள்ளன. ஆந்திரா மாநிலம்

குடியாத்தம்: குடியாத்தம் அருகே, நெல் பயிர்களை நாசம் செய்து, பள்ளி சுவரை, யானை கூட்டம் இடித்து தள்ளியதால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே தமிழக - ஆந்திரா மாநில எல்லையிலுள்ள கொட்டாரமடுகு, ஜிட்டபள்ளி, மோர்த்தானா, அனுப்பு, கொட்டமிட்டா, பரதராமி, ரங்கசமுத்திரம் உள்ளிட்ட, 25 கிராமங்கள், தமிழக - ஆந்திரா மாநில எல்லையில் உள்ளன. ஆந்திரா மாநிலம் பலமனேரி, குப்பம், சித்தூரிலிருந்து அடிக்கடி யானைகள் தமிழக பகுதிக்குள் வந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்நிலையில், பரதராமி அருகிலுள்ள ரங்கசமுத்திரத்துக்கு நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, 22 யானைகள் நுழைந்தன. அவற்றை மக்கள் விரட்டியதால், ஆத்திரமடைந்த யானைகள், அருகே அழகேசன் என்பவருக்கு சொந்தமான பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றன. பின், அருகிலிருந்த விநாயகம், 56, ரவிச்சந்திரன், 78, ஆகியோரது விளைநிலத்தில் நுழைந்து, 2,000 வாழை மரங்களை நாசம் செய்தன. மேலும், சுப்பிரமணியன், 89, குப்பம்மாள், 89, ஆகியோரது, ஐந்து ஏக்கர் நிலத்தில் விளைந்திருந்த நெல், மஞ்சள் பயிர்களை நாசம் செய்தன. அங்கு சென்ற குடியாத்தம் வனத்துறையினர், ஆந்திரா வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டியடித்தனர். எப்போது வேண்டுமானாலும், யானைகள் திரும்ப வரும் என்பதால், சுற்றுட்டார, 25 கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X