பொது செய்தி

தமிழ்நாடு

ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு: கணக்கில் வராத ரூ.3.87 லட்சம் பறிமுதல்

Added : நவ 22, 2020
Share
Advertisement
ஓசூர்: ஓசூர், சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில், கணக்கில் வராத, 3.87 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எம்.ஜி., ரோட்டில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பத்திரப்பதிவுக்கு, புரோக்கர்கள் மூலம் லஞ்சம் பெறப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதன்படி கடந்த ஆண்டு மார்ச், 1ல், லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு

ஓசூர்: ஓசூர், சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில், கணக்கில் வராத, 3.87 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எம்.ஜி., ரோட்டில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பத்திரப்பதிவுக்கு, புரோக்கர்கள் மூலம் லஞ்சம் பெறப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதன்படி கடந்த ஆண்டு மார்ச், 1ல், லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத, ஒரு லட்சத்து, 86 ஆயிரத்து, 370 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பின்பும், அந்த அலுவலகத்தில் புரோக்கர்கள் மூலம் தொடர்ந்து லஞ்சம் பெறப்பட்டு வந்ததாக, மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதையடுத்து, டி.எஸ்.பி., கிருஷ்ணராஜன் தலைமையில், இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மாலை, 6:30 முதல், இரவு, 11:45 மணி வரை, ஓசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, இணை சார்பதிவாளர் நேருவிடம் கணக்கில் வராத, மூன்று லட்சத்து, 58 ஆயிரத்து, 400 ரூபாய் மற்றும் சார்பதிவாளர் (பொறுப்பு) பன்னீர்செல்வத்திடம் இருந்த, 28 ஆயிரத்து, 500 ரூபாய் என, மொத்தம், மூன்று லட்சத்து, 86 ஆயிரத்து, 900 ரூபாயை பறிமுதல் செய்தனர். தற்போது, அவர்கள் இருவரிடமும் துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X