பொது செய்தி

தமிழ்நாடு

இரட்டை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு: சித்த மருத்துவ சிகிச்சை மையம் மூடல்

Added : நவ 22, 2020
Share
Advertisement
வீரபாண்டி: கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, இரட்டை இலக்கத்துக்கு வந்ததை தொடர்ந்து, சித்த மருத்துவ சிகிச்சை மையம் காலி செய்யப்பட்டது.தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை, தினசரி ஆயிரக்கணக்கில் அதிகரித்து வந்ததை தொடர்ந்து, சேலத்தில் அலோபதி சிகிச்சைக்காக, அரசு மருத்துவமனை, பல கல்லூரிகளில் சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டன. இதே

வீரபாண்டி: கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, இரட்டை இலக்கத்துக்கு வந்ததை தொடர்ந்து, சித்த மருத்துவ சிகிச்சை மையம் காலி செய்யப்பட்டது.


தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை, தினசரி ஆயிரக்கணக்கில் அதிகரித்து வந்ததை தொடர்ந்து, சேலத்தில் அலோபதி சிகிச்சைக்காக, அரசு மருத்துவமனை, பல கல்லூரிகளில் சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டன. இதே போல், சித்த மருத்துவ சிகிச்சைக்காக, உத்தமசோழபுரத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரிய மாநில பயிற்சி மைய விடுதி, பெருமாம்பட்டியில் உள்ள தனியார் சித்த மருத்துவ கல்லூரி ஆகிய இரண்டு இடங்களில், சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டன. கடந்த ஆக.,4ல் துவக்கப்பட்ட சிகிச்சை மையம் நவ., 15 வரை செயல்பட்டது. இதில், 704 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில், 675 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 29 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து, சேலம் மாவட்டத்தில், இரட்டை இலக்கத்திலேயே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உள்ளதால், உத்தமசோழபுரத்தில் செயல்பட்டு வந்த, சித்த மருத்துவ சிகிச்சை மையம் காலி செய்யப்பட்டு, கட்டடம் மற்றும் வளாகம் முழுவதும் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட்டு, வேளாண்மை துறையிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் செல்வமூர்த்தி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X