சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு 7 ஆண்டு சிறை

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருவண்ணாமலை: போளூர் அருகே, வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை வழங்கி, திருவண்ணாமலை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த கங்களமகாதேவியை சேர்ந்தவர் பரசுராமன், 41; இவர், கடந்த, 2015 ஆக.,ல் அதே பகுதியை சேர்ந்த, கணவரை இழந்த, 40, வயது பெண்ணை வீட்டிற்குள் புகுந்து பலாத்காரம் செய்ய முயன்றார். இது குறித்த

திருவண்ணாமலை: போளூர் அருகே, வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை வழங்கி, திருவண்ணாமலை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த கங்களமகாதேவியை சேர்ந்தவர் பரசுராமன், 41; இவர், கடந்த, 2015 ஆக.,ல் அதே பகுதியை சேர்ந்த, கணவரை இழந்த, 40, வயது பெண்ணை வீட்டிற்குள் புகுந்து பலாத்காரம் செய்ய முயன்றார். இது குறித்த புகாரின்படி, போளூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கின் விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட, முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள், பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற பரசுராமனுக்கு, ஏழு ஆண்டு சிறையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து, நேற்று முன்தினம் மாலை உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X