பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., வெற்றியை தடுக்க முடியாது: காணொலி கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

Added : நவ 22, 2020
Share
Advertisement
சேலம்: ''வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது,'' என, காணொலி கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார்.தி.மு.க., சார்பில், 2021 சட்டசபை தேர்தல் சிறப்பு கூட்டம், 'தமிழகம் மீட்போம்' பெயரில், காணொலி மூலம் நடத்தப்படுகிறது. சேலத்தில், கிழக்கு, மேற்கு, மத்திய மாவட்ட கூட்டம், தனித்தனி இடத்தில், ஒருசேர, நேற்று நடந்தது. மாவட்ட பொறுப்பாளர்கள் முறையே,

சேலம்: ''வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது,'' என, காணொலி கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார்.
தி.மு.க., சார்பில், 2021 சட்டசபை தேர்தல் சிறப்பு கூட்டம், 'தமிழகம் மீட்போம்' பெயரில், காணொலி மூலம் நடத்தப்படுகிறது. சேலத்தில், கிழக்கு, மேற்கு, மத்திய மாவட்ட கூட்டம், தனித்தனி இடத்தில், ஒருசேர, நேற்று நடந்தது. மாவட்ட பொறுப்பாளர்கள் முறையே, சிவலிங்கம், செல்வகணபதி, மாவட்ட செயலர் ராஜேந்திரன் தலைமை வகித்தனர்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: அரசு பள்ளி மாணவருக்கு, உள் ஒதுக்கீடு மூலம், தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்தி படிக்க முடியாதவர்களுக்கு, தி.மு.க., தரப்பில் கட்டணம் செலுத்தப்படும் என அறிவித்த, அதே நேரத்தில், அரசே கல்வி கட்டணத்தை ஏற்கும் என, முதல்வர் பழனிசாமி அறிவித்து, அரசியல் செய்கிறார். சேலத்தில், கட்சியை வளர்த்த, 'வீரபாண்டி ஆறுமுகம்' மறைந்தாலும், பல நூறு, 'வீரபாண்டி ஆறுமுகம்' தி.மு.க.,வில் உருவாகி வருகின்றனர். ரயில்வே கோட்டம், பெரியார் பல்கலை, சேலம் மாநகருக்கு, தனி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், ஏற்காடு தாவரவியல் பூங்கா போன்ற எண்ணற்ற திட்டங்கள், தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டன. ஆனால், தி.மு.க., கொண்டு வந்த தகவல் தொழில் நுட்ப பூங்கா முடக்கி வைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டம் நிறைவு செய்யப்படாமல் தாமதப்படுத்தப்பட்டுள்ளது. ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிக்கு, இதுவரை, கூட்டு குடிநீர் கிடைக்கவில்லை. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சரிவர பராமரிக்கப்படவில்லை.

சேலத்தில், போக்குவரத்து நெரிசலை குறைக்க, 'பஸ்போர்ட்' கொண்டு வரப்படும் என, அறிவித்து, மூன்றாண்டு ஆகியும், இதுவரை அதற்கான நடவடிக்கை இல்லை. 'ரிங் ரோடு' திட்டம் செயல்படுத்தவில்லை. முள்ளுவாடி கேட் மேம்பாலமும் பயன்பாட்டுக்கு வரவில்லை. பசுமை சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விவசாயிகளை, அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாத முதல்வர், தன்னை விவசாயி எனக்கூறி கொள்கிறார். அவர், உண்மையான விவசாயி என்றால், மூன்று வேளாண் சட்ட மசோதாவை, ஆதரித்திருக்க மாட்டார். டெல்டா மாவட்டங்களை, வேளாண் மண்டலமாக அறிவித்து, விவசாயிகளையும், மக்களையும் ஏமாற்றி விட்டார். அதனால், முதல்வர் பழனிசாமி, விவசாயிகளின் காப்பான் அல்ல; விவசாயிகளின் ஏய்ப்பான். குடிமராமத்து திட்டம் நிறைவேற்றியதாக, 4,000 கோடி ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால், சவுடு மண், மணல் கொள்ளை நடந்துள்ளது. முந்தைய, 10 ஆண்டு தி.மு.க., ஆட்சியில் செய்த, சாதனையை பட்டியலிடுகிறேன். அதேபோல், நடப்பு, 10 ஆண்டு அ.தி.மு.க., அரசின் சாதனையை பட்டியல் போட முடியுமா? அதை நான், சவாலாகவே சொல்கிறேன். பதவிக்கு, அரசியலில் பலருக்கு துரோகம் செய்த பழனிசாமிக்கு, என்னை பற்றி பேச, எந்த அருகதையும் இல்லை. அவருக்கு, கை; வாய் சுத்தம் எதுவும் கிடையாது. வரும் தேர்தலில், தி.மு.க.,வின் வெற்றியை தடுக்க முடியாது. 1996 தேர்தலை போல், 2021ல், அ.தி.மு.க., படுதோல்வி அடையும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, மூன்று மாவட்டங்கள் சார்பில், கட்சி முன்னோடி, 589 பேருக்கு, தலா, 10 ஆயிரம் பண முடிப்பு, வேட்டி, சட்டை உள்ளிட்டவை வழங்கி கவுரவிக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X