பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: மாவட்ட பார்வையாளர் பங்கேற்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், 'சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தம்-2021' குறித்த ஆலோசனை கூட்டம், நடந்தது. கலெக்டர் மெகராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர், சிவசண்முகராஜா தலைமை வகித்து பேசியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், 'சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தம்-2021' குறித்த ஆலோசனை கூட்டம், நடந்தது. கலெக்டர் மெகராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர், சிவசண்முகராஜா தலைமை வகித்து பேசியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சேர்ந்து, மேற்கொள்ள வேண்டிய பணி. தங்கள் பகுதியில், 18 வயது பூர்த்தி அடைந்த அனைத்து நபர்களையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்க, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள், விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஒருவர் கூட விடுபடாமல் சேர்க்க பணியாற்ற வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால், அவற்றை சரி செய்யும் பணிகளில், அரசுத்துறை அலுவலர்களுக்கு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, நாமக்கல் வடக்கு மற்றும் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளுக்கான சிறப்பு முகாம் நடப்பதை பார்வையிட்டார். ஆர்.டி.ஓ.,க்கள் கோட்டைக்குமார், மணிராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X