பொது செய்தி

தமிழ்நாடு

திருச்செங்கோடு வட்டாரத்தில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருச்செங்கோடு: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வட்டார வள மையம் சார்பில், 'கற்போம்; எழுதுவோம்' தன்னார்வலர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம், திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளயில் நடந்தது. வட்டார மேற்பார்வையாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் ரவி துவக்கி வைத்தார். திட்ட அலுவலர் குமார், தலைமையாசிரியர் தேன்மொழி, வட்டார கல்வி அலுவலர் மாதவன்

திருச்செங்கோடு: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வட்டார வள மையம் சார்பில், 'கற்போம்; எழுதுவோம்' தன்னார்வலர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம், திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளயில் நடந்தது. வட்டார மேற்பார்வையாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் ரவி துவக்கி வைத்தார். திட்ட அலுவலர் குமார், தலைமையாசிரியர் தேன்மொழி, வட்டார கல்வி அலுவலர் மாதவன் ஆகியோர், முகாமின் நோக்கம் குறித்து விளக்கினர். பயிற்சியில், கொரோனா விழிப்புணர்வு, சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல், சத்தான உணவு உட்கொள்ளுதல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து, 15 வயதுக்கு மேற்பட்ட கல்லாதோருக்கு அடிப்படை திறன் பயிற்சி, தமிழ் எழுத்துகள் வாசித்தல் மற்றும் எழுதுதல், எண்கள் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் பயிற்சி. வடிவங்கள், பாலினப் பாகுபாடு, இணைய வழி சேவை, பேரிடர் மேலாண்மை, சாலை பாதுகாப்பு, முதல் உதவி, பெண் கல்வி, தூய்மை பாரதம் உள்ளிட்டவற்றை, எவ்வாறு கற்பிப்பது என்று பயிற்சி வழங்கப்பட்டது. ஆசிரியர் பயிற்றுனர்கள் ரகுபதி, மோகன், சூரியம்பாளையம் நடுநிலைப்பள்ளி உதவி ஆசிரியர் நல்லசிவம் ஆகியோர், கருத்தாளர்களாக செயல்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X