பொது செய்தி

தமிழ்நாடு

மோகனூர் சர்க்கரை ஆலையில் அரவை துவக்கம்: நடப்பு ஆண்டு ஒரு லட்சம் டன் கரும்பு இலக்கு

Added : நவ 22, 2020
Share
Advertisement
மோகனூர்: நாமக்கல் மாவட்டம், மோகனூரில், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, நாமக்கல், சேலம், திருச்சி மாவட்டங்களில் இருந்து, கரும்பு வெட்டி எடுத்து அரவைக்கு கொண்டு வரப்படுகிறது.நடப்பு, 2020-21ம் ஆண்டுக்கான கரும்பு அரவை, நேற்று துவங்கியது. நிர்வாக இயக்குனர் விஜய்பாபு தலைமை வகித்து அரவையை துவக்கி வைத்தார். இந்த அரவை பருவத்தில், ஒரு லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயம்

மோகனூர்: நாமக்கல் மாவட்டம், மோகனூரில், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, நாமக்கல், சேலம், திருச்சி மாவட்டங்களில் இருந்து, கரும்பு வெட்டி எடுத்து அரவைக்கு கொண்டு வரப்படுகிறது.
நடப்பு, 2020-21ம் ஆண்டுக்கான கரும்பு அரவை, நேற்று துவங்கியது. நிர்வாக இயக்குனர் விஜய்பாபு தலைமை வகித்து அரவையை துவக்கி வைத்தார். இந்த அரவை பருவத்தில், ஒரு லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக, 930 ஏக்கர் நடவு கரும்பும், 2,009 ஏக்கர் கட்டைக் கரும்பும் என, மொத்தம், 2,939 ஏக்கர், இந்த ஆலைப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நிர்வாக இயக்குனர் விஜய்பாபு கூறியதாவது: கடந்த, 2019-20ல், வறட்சியின் காரணமாக, ஆலையில், 1.08 லட்சம் டன்கள் கரும்பு மட்டுமே அரவை செய்யப்பட்டது. ஆலையின் அரவைக்கு, அனுப்பப்படும் கரும்புக்கான கிரையத்தொகை, கரும்பு பதிவு ஒப்பந்தப்படி, அங்கத்தினர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X