சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எலக்ட்ரிகல் கடையில் திருடிய வழக்கு: தேனி மாவட்ட வாலிபர் கைது

Added : நவ 22, 2020
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் கே.எம்.சி.தெருவில், எலக்ட்ரிகல் கடை நடத்தி வருபவர் ஆனந்த், 43. அவர், கடந்த, 11 இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் கடையை திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாவில் வைத்திருந்த, இரண்டு லட்சம் ரூபாய் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. நாமக்கல் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினர். இந்நிலையில், நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே,

நாமக்கல்: நாமக்கல் கே.எம்.சி.தெருவில், எலக்ட்ரிகல் கடை நடத்தி வருபவர் ஆனந்த், 43. அவர், கடந்த, 11 இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் கடையை திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாவில் வைத்திருந்த, இரண்டு லட்சம் ரூபாய் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. நாமக்கல் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினர். இந்நிலையில், நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே, இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும் வகையில், துணி பையுடன் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், ஒரு லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. அது குறித்து கேட்டபோது, அவர் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்துள்ளார். தீவிர விசாரணையில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் இந்திராநகரை சேர்ந்த மலைராஜ் மகன் செல்வகுமார், 21 என்பது தெரிந்தது. மேலும், கடந்த, 11 இரவு, ஆனந்த் கடையின் பூட்டை உடைத்து, பணம் திருடியதை ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X