சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழிப்பறி வழக்கில் கைது: வாலிபர் மீது குண்டாஸ்

Added : நவ 22, 2020
Share
Advertisement
நாமக்கல்: வழிப்பறி வழக்கில் கைதாகிய வாலிபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. தஞ்சை மாவட்டம், கரந்தையை சேர்ந்த சிவசுப்ரமணியம் மகன் ஆகாஷ், 20. கடந்த, ஆக., 22ல், நாமக்கல் அடுத்த வேலகவுண்டம்பட்டி டாஸ்மாக் கடையில், அவர் உள்பட, மூன்று பேர், கடை விற்பனையாளரை மிரட்டி, 3.46 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்து தப்பினர். சம்பவம் தொடர்பாக, வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, ஆகா?ஷ

நாமக்கல்: வழிப்பறி வழக்கில் கைதாகிய வாலிபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. தஞ்சை மாவட்டம், கரந்தையை சேர்ந்த சிவசுப்ரமணியம் மகன் ஆகாஷ், 20. கடந்த, ஆக., 22ல், நாமக்கல் அடுத்த வேலகவுண்டம்பட்டி டாஸ்மாக் கடையில், அவர் உள்பட, மூன்று பேர், கடை விற்பனையாளரை மிரட்டி, 3.46 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்து தப்பினர். சம்பவம் தொடர்பாக, வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, ஆகா?ஷ கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது, ப.வேலூர் போலீஸ் ஸ்டேஷனில் வழிப்பறி வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., சக்தி கணேசன் பரிந்துரையின் பேரில், கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டார். அதற்காக உத்தரவு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆகாஷிடம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X