தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்

Added : நவ 22, 2020
Share
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் வட்டார, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஐந்தாவது வட்ட பேரவை கூட்டம், யூனியன் அலுவலக வளாகத்தில் நடந்தது. வட்டார தலைவர் ராஜ்சித் தலைமை வகித்தார். இதில், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் மீது, போடப்பட்ட வழக்குகளை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும். கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அலுவலகம், வருவாய்த்துறை அலுவலகங்களின் முன்,

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் வட்டார, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஐந்தாவது வட்ட பேரவை கூட்டம், யூனியன் அலுவலக வளாகத்தில் நடந்தது. வட்டார தலைவர் ராஜ்சித் தலைமை வகித்தார். இதில், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் மீது, போடப்பட்ட வழக்குகளை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும். கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அலுவலகம், வருவாய்த்துறை அலுவலகங்களின் முன், கரூர், திருச்சி செல்லும் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கருணை அடிப்படையில், பணியில் சேர்ந்தவர்களை வரைமுறைபடுத்த வேண்டும். கோவக்குளம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும், எம்.ஆர்.பி., செவிலியர்களுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் மாத ஊதியம் உரிய காலத்தில் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X