பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்டம் வேண்டாம்: கரூர் எஸ்.பி., எச்சரிக்கை

Added : நவ 22, 2020
Share
Advertisement
கரூர்: 'ஆபத்தான ஆன்லைன் சூதாட்டம், விளையாட்டுகளில் பெற்றோர் மட்டுமன்றி, குழந்தைகளையும் விளையாட அனுமதிக்க கூடாது' என, கரூர் எஸ்.பி., பகலவன் எச்சரித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: ஒரு சிலரின் அதீத ஆசை, பொருளாதாரத்தில் உடனே வளர்ச்சி அடைய வேண்டும் என்ற பேராசை காரணமாக, ஆன்லைன் சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். அதில், நினைத்த பரிசை பெற முடியாத மன உளைச்சல், அதற்கு

கரூர்: 'ஆபத்தான ஆன்லைன் சூதாட்டம், விளையாட்டுகளில் பெற்றோர் மட்டுமன்றி, குழந்தைகளையும் விளையாட அனுமதிக்க கூடாது' என, கரூர் எஸ்.பி., பகலவன் எச்சரித்துள்ளார்.


அவர் வெளியிட்ட அறிக்கை: ஒரு சிலரின் அதீத ஆசை, பொருளாதாரத்தில் உடனே வளர்ச்சி அடைய வேண்டும் என்ற பேராசை காரணமாக, ஆன்லைன் சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். அதில், நினைத்த பரிசை பெற முடியாத மன உளைச்சல், அதற்கு செலவு செய்த பணத்தை திரும்ப எடுக்க முடியவில்லை என்ற, மன வேதனைக்கு ஆளாகின்றனர். சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். பெற்றோர் பலர், குழந்தைகளுடன் நேரம் ஒதுக்காமல், மொபைல் போனை கொடுத்து பழக்கி, தவறான வழிக்கு செல்ல வாய்ப்பு அளிக்கின்றனர். குழந்தைகள் மொபைல்போனை எப்படி பயன்படுத்துகின்றனர் என, கண்காணிப்பது இல்லை. பெற்றோர் அல்லது குழந்தைகள் மொபைல் போனில், ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டால், அந்த குடும்பத்திற்கு இழப்பு ஏற்படும். எனவே, மொபைல் போனில், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட வேண்டாம். குழந்தைகளையும் மொபைல் போனில் விளையாட அனுமதிக்க வேண்டாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X