பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: பெயர் சேர்க்க புதியவர்கள் ஆர்வம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
கரூர்: வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த முகாம் ஓட்டுச் சாவடிகளில் நடந்தது. அதில், பெயர்களை சேர்க்க, அதிக எண்ணிக்கையில் மக்கள் ஆர்வத்துடன் குவிந்தனர்.தமிழக சட்டசபை தேர்தல், அடுத்தாண்டு எப்ரல் அல்லது மே மாதம் நடக்க உள்ளது. அதற்காக, பல்வேறு அரசியல் கட்சிகள் பணிகளை துவக்கியுள்ளது. தேர்தல் கமிஷனும், சட்டசபை தேர்தல் பணியில், சுறுசுறுப்பாக இறங்கியுள்ளது. வாக்காளர்

கரூர்: வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த முகாம் ஓட்டுச் சாவடிகளில் நடந்தது. அதில், பெயர்களை சேர்க்க, அதிக எண்ணிக்கையில் மக்கள் ஆர்வத்துடன் குவிந்தனர்.


தமிழக சட்டசபை தேர்தல், அடுத்தாண்டு எப்ரல் அல்லது மே மாதம் நடக்க உள்ளது. அதற்காக, பல்வேறு அரசியல் கட்சிகள் பணிகளை துவக்கியுள்ளது. தேர்தல் கமிஷனும், சட்டசபை தேர்தல் பணியில், சுறுசுறுப்பாக இறங்கியுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்த பணி, மாநிலம் முழுவதும், அந்தந்த ஓட்டுச் சாவடிகளில் நேற்று துவங்கியது. அதில், புதிய பெயர்களை சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மற்றும் பெயர் முகவரி மாற்ற பொதுமக்கள் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள, 1,032 ஓட்டுச் சாவடிகளிலும், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வாக்காளர் பட்டியலில், பெயர் உள்ளதா என ஊழியர்களிடம் கேட்டு, தெரிந்து கொண்டனர். குறிப்பாக, 18 வயது நிரம்பிய, புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர ஆர்வத்துடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். பொதுமக்கள் வசதிக்காக இன்றும், வரும் டிச., 12, 13ம் தேதிகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X