தமிழ்நாடு

கரூர் அருகே ரூ.406.50 கோடியில் கதவணை: 0.8 டி.எம்.சி., தண்ணீர் சேமிக்கலாம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்டம், புகளூரில் காவிரியாற்றின் குறுக்கே, தடுப்பணை கட்ட வேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, ஆய்வு பணிகளை மேற்கொள்ள, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டார். இதையடுத்து, 406.50 கோடி ரூபாயில், கரூர் நஞ்சை புகளூர், நாமக்கல் அணிச்சம்பாளையம் இடையே, காவிரியாற்றின் குறுக்கே கதவணை கட்ட

கரூர்: கரூர் மாவட்டம், புகளூரில் காவிரியாற்றின் குறுக்கே, தடுப்பணை கட்ட வேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, ஆய்வு பணிகளை மேற்கொள்ள, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டார். இதையடுத்து, 406.50 கோடி ரூபாயில், கரூர் நஞ்சை புகளூர், நாமக்கல் அணிச்சம்பாளையம் இடையே, காவிரியாற்றின் குறுக்கே கதவணை கட்ட திட்டமிடப்பட்டது. அதற்கு, முதல்வர் பழனிசாமி ஒப்புதல் அளித்ததால், நபார்டு வங்கி நிதியுதவி அளித்தது. நேற்று, சென்னையில் இருந்தபடி, கதவணை கட்டும் பணியை, வீடியோ கான்பரன்ஸ் மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். பிறகு, காவிரியாற்றில் கதவணை கட்டும் இடத்தில், கலெக்டர் மலர்விழி தலைமையில், பூமி பூஜை விழா நடந்தது. அதில், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


73 ஷட்டர்கள் அமைப்பு: புதிய கதவணை, 1,056 மீட்டர் நீளத்தில், 73 ஷட்டர்களுடன் அமைக்கப்பட உள்ளது. அதில், 0.8 டி.எம்.சி., தண்ணீர் சேமிக்க முடியும். வினாடிக்கு, மூன்று லட்சத்து, 60 ஆயிரம் கன அடி தண் ணீர் வெளியேற்ற முடியும். கதவணையின் வலதுபுற வாங்கல் வாய்க்கால் மூலம், 1,458 ஏக்கர் பாசன நிலங்களும், இடதுபுற மோகனூர் வாய்க்கால் மூலம், 2,583 ஏக்கர் பாசன நிலங்களும் பாசன வசதியை பெற உள்ளன. புதிய கதவணை மூலம், கரூர், நாமக்கல் மாவட்டங்களில், குடிநீர் ஆதாரம் கிடைப்பதோடு, நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X