பொது செய்தி

தமிழ்நாடு

நீர் மேலாண்மை திட்டப்பணி: மானியத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
கரூர்: துணை நிலை, நீர் மேலாண்மை திட்டப்பணிகளுக்கு, மானியம் பெற, விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில், நுண்ணீர் பாசன அமைப்புகளை உருவாக்குவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு முழு மானியமும், பிற விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியமும் அளிக்கப்படுகிறது. நுண்ணீர் பாசன முறைக்காக வழங்கப்படும் மானியம்

கரூர்: துணை நிலை, நீர் மேலாண்மை திட்டப்பணிகளுக்கு, மானியம் பெற, விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.


இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில், நுண்ணீர் பாசன அமைப்புகளை உருவாக்குவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு முழு மானியமும், பிற விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியமும் அளிக்கப்படுகிறது. நுண்ணீர் பாசன முறைக்காக வழங்கப்படும் மானியம் மட்டுமின்றி, குழாய் கிணறு, துளை கிணறு அமைக்கவும், நீரினை இறைப்பதற்கு ஆயில் இன்ஜின், மின்மோட்டார் வசதி ஏற்படுத்தவும், பாசன நீரினை வீணாக்காமல் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கும், பாசன நீர் குழாய்களை நிறுவவும், தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல் போன்ற, துணை நிலை நீர் மேலாண்மை பணிகளுக்காக, மானியம் வழங்கப்பட்டு வருகிறது. குழாய் கிணறு, ஆழ்துளை கிணறு அமைக்க, டீசல் பம்புசெட், மின் மோட்டார் பம்புசெட் நிறுவ, நீர் பாசன குழாய் அமைக்க, பாதுகாப்பு வேலியுடன் தரைநிலை நீர்தேக்கத் தொட்டி நிறுவ, ஆகிய பணிகளுக்கு தலா, 50 சதவீதம் மானியம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும். மேலும், தகவல் பெற, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X