பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமர் குறித்து மீண்டும் சுவர் விளம்பரம்: தி.மு.க.,வை கண்டித்து பா.ஜ., மறியல்

Added : நவ 22, 2020
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே, பிரதமர் குறித்த அவதூறு விளம்பரங்களை போலீசார் அழித்த நிலையில், மீண்டும் எழுதப்பட்டது. இதையடுத்து, அங்கு சென்ற, பா.ஜ.,வினர், 'ஐந்து கட்சி அமாவாசை' என்று எழுதி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கரூரில் பல்வேறு இடங்களில் சுவற்றில், 'கோ பேக் மோடி' என்று விளம்பரம் எழுதப்பட்டது. பா.ஜ., சார்பில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. கடந்த, 16ல்

கரூர்: கரூர் அருகே, பிரதமர் குறித்த அவதூறு விளம்பரங்களை போலீசார் அழித்த நிலையில், மீண்டும் எழுதப்பட்டது. இதையடுத்து, அங்கு சென்ற, பா.ஜ.,வினர், 'ஐந்து கட்சி அமாவாசை' என்று எழுதி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கரூரில் பல்வேறு இடங்களில் சுவற்றில், 'கோ பேக் மோடி' என்று விளம்பரம் எழுதப்பட்டது. பா.ஜ., சார்பில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. கடந்த, 16ல் அரவக்குறிச்சி அருகில் தடாகோவிலில் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ., துணை தலைவர் அண்ணாமலை பேசியபோது, 'வரும், 24க்குள், 'கோ பேக் மோடி' விளம்பரத்தை அழிக்கவில்லை என்றால், 'ஐந்து கட்சி அமாவாசை' என்றும், 'சுடலை ராஜா' என்றும் எழுதுவோம்' என, தி.மு.க., மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.,வுமான செந்திபாலாஜிக்கு சவால் விடுத்தார். இதையடுத்து, அந்த விளம்பரங்களை, போலீசார் அழித்தனர். அந்த இடங்களில் மீண்டும், 'கோ பேக் மோடி' என்று எழுதப்பட்டது. பா.ஜ.,வினர், நேற்று காலை, 11:00 மணிக்கு வெங்கமேட்டில் குவிந்தனர். அங்குள்ள சுவர் விளம்பரங்களை அழித்து விட்டு, 'ஐந்து கட்சி அமாவாசை' என்று எழுதினர். தொடர்ந்து, பிரதமர் பற்றி அவதூறாக எழுதிய, தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கரூர்- சேலம் பழைய சாலையில், பா.ஜ., வடக்கு நகர தலைவர் வடிவேல் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட, ஐந்து பெண்கள் உட்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X