உழவர் சந்தை சாலையில் நெரிசல்; வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

Added : நவ 22, 2020
Share
Advertisement
கரூர்: கரூரிலிருந்து, திருச்சி செல்லும் சாலையில், உழவர் சந்தை அமைந்துள்ளது. லைட்ஹவுஸ் கார்னர், கலெக்டர் அலுவலகம் மற்றும் திருச்சிக்கு செல்லும் முக்கிய வழியாக உள்ளது. இவ்வழியாக, இரு சக்கர வாகனங்கள், வேன், கார், மினி பஸ் மற்றும் திருச்சிக்கு பஸ்கள் செல்கின்றன. உழவர் சந்தைக்குள் கடைகள் இருந்தாலும், வெளியில் தரைக்கடை வியாபாரிகள் அதிகம் கூடுகின்றனர். இதனால், இரு சக்கர

கரூர்: கரூரிலிருந்து, திருச்சி செல்லும் சாலையில், உழவர் சந்தை அமைந்துள்ளது. லைட்ஹவுஸ் கார்னர், கலெக்டர் அலுவலகம் மற்றும் திருச்சிக்கு செல்லும் முக்கிய வழியாக உள்ளது. இவ்வழியாக, இரு சக்கர வாகனங்கள், வேன், கார், மினி பஸ் மற்றும் திருச்சிக்கு பஸ்கள் செல்கின்றன. உழவர் சந்தைக்குள் கடைகள் இருந்தாலும், வெளியில் தரைக்கடை வியாபாரிகள் அதிகம் கூடுகின்றனர். இதனால், இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள், சாலை நடுவிலேயே நிறுத்தி விடுகின்றனர். சாலையில், மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இங்கு, போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தும் கூட, ஒழங்குப்படுத்த முடியவில்லை. எனவே, சாலையில் ஆக்கிரமித்து கடைகள் போடுபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வாகன நிறுத்தத்துக்கு, உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது, அனைவரின் கோரிக்கையாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X