போதிய பராமரிப்பு இல்லாத சின்னதாராபுரம் பஸ் ஸ்டாண்ட்

Added : நவ 22, 2020
Share
Advertisement
கரூர்: சின்னதாராபுரம் பஸ் ஸ்டாண்ட் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கரூர், தாராபுரம் நெடுஞ்சாலையில், 30 கி.மீ., தொலைவில் சின்னதாராபுரம் உள்ளது. இங்குள்ள பஸ் ஸ்டாண்ட், பல ஆண்டுகளாகப் போதிய பராமரிப்பின்றி இருந்து வருகிறது.மழை காலங்களில், தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. பயணிகள் அமர முடியாமல் சாலையின் ஓரத்தில் நின்று, செல்ல வேண்டிய இடங்களுக்கு பஸ்சில் ஏறி

கரூர்: சின்னதாராபுரம் பஸ் ஸ்டாண்ட் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கரூர், தாராபுரம் நெடுஞ்சாலையில், 30 கி.மீ., தொலைவில் சின்னதாராபுரம் உள்ளது. இங்குள்ள பஸ் ஸ்டாண்ட், பல ஆண்டுகளாகப் போதிய பராமரிப்பின்றி இருந்து வருகிறது.மழை காலங்களில், தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. பயணிகள் அமர முடியாமல் சாலையின் ஓரத்தில் நின்று, செல்ல வேண்டிய இடங்களுக்கு பஸ்சில் ஏறி செல்கின்றனர். இரவு நேரங்களில், குடிமகன்கள் பாராக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் டம்ளர், மது பாட்டில் களை அப்படியே போட்டுச் செல்கின்றனர். எனவே, பஸ் ஸ்டாண்டை முறையாக பராமரிக்க வேண்டும். இதனை, ஒன்றிய அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X