இரட்டை வாய்க்காலில் சுகாதார சீர்கேடு தூர்வார பொதுமக்கள் வலியுறுத்தல்

Added : நவ 22, 2020
Share
Advertisement
கரூர்: கரூர் நகரின் மையப்பகுதியில் ஓடும் இரட்டை வாய்க்காலில், பல நாட்களாக தேங்கியுள்ள, மருத்துவகழிவு மற்றும் சாக்கடை கழிவுநீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.கரூர் நகரின் துயரம் என, அழைக்கப்படும் இரட்டை வாய்க்காலில், குப்பை மட்டுமல்ல, மருத்துவ கழிவுகளும் கொட்டப்பட்டு வருகின்றன. இதை, முறையாக அப்புறப்படுத்துவது இல்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை

கரூர்: கரூர் நகரின் மையப்பகுதியில் ஓடும் இரட்டை வாய்க்காலில், பல நாட்களாக தேங்கியுள்ள, மருத்துவகழிவு மற்றும் சாக்கடை கழிவுநீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.


கரூர் நகரின் துயரம் என, அழைக்கப்படும் இரட்டை வாய்க்காலில், குப்பை மட்டுமல்ல, மருத்துவ கழிவுகளும் கொட்டப்பட்டு வருகின்றன. இதை, முறையாக அப்புறப்படுத்துவது இல்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், இரட்டை வாய்க்காலில் ஏற்கனவே இருந்த குப்பை, சாக்கடை கழிவுகள் மழைநீருடன் சேர்ந்து, திட்டு திட்டாக பல பகுதிகளில் தேங்கியுள்ளது. குறிப்பாக, மக்கள் பாதை பகுதியில் தேங்கியுள்ள சாக்கடை கழிவுகளால், அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, மழை காலத்தில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், டெங்கு, மலேரியா, டைபாய்டு போன்ற நோய் தாக்குதலுக்கு ஆளாகி, பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கரூர் இரட்டை வாய்க்காலை தூர்வாரி, சாக்கடை கழிவு நீர் மற்றும் குப்பையை உடனடியாக அப்புறப்படுத்த, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X