பொது செய்தி

தமிழ்நாடு

'உதயநிதியை கைது செய்ததன் மூலம் அவரை ஹூரோ ஆக்கி விட்டார்கள்'

Added : நவ 22, 2020
Share
Advertisement
வேலூர்: ''உதயநிதியை கைது செய்ததன் மூலம், அவரை ஹூ?ரோ ஆக்கி விட்டனர்,'' என, தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.இது குறித்து, வேலூர் மாவட்டம், காட்பாடியில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அரசு பள்ளியில் படித்து, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடித்த மாணவர்களுக்கு, முழு கல்வி கட்டணத்தை, தி.மு,க., ஏற்கும் என, முதலில் தலைவர் ஸ்டாலின்

வேலூர்: ''உதயநிதியை கைது செய்ததன் மூலம், அவரை ஹூ?ரோ ஆக்கி விட்டனர்,'' என, தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.


இது குறித்து, வேலூர் மாவட்டம், காட்பாடியில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அரசு பள்ளியில் படித்து, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடித்த மாணவர்களுக்கு, முழு கல்வி கட்டணத்தை, தி.மு,க., ஏற்கும் என, முதலில் தலைவர் ஸ்டாலின் தான் அறிவித்தார். அதன் பின்னர் தான், கல்வி கட்டணத்தை ஏற்பதாக, அரசு அறிவித்தது. இந்த அரசு, ஸ்டாலின் வழியில் நடக்கிறதா, அவர்களுக்கு சுய சிந்தனை இல்லையா. தி.மு.க., போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி, 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு. தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட உதயநிதியை கைது செய்து, அவரை ஹீரோ ஆக்கி விட்டனர். எங்களுக்கு நல்ல விளம்பரத்தை தேடி கொடுத்து விட்டனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வந்தபோது, அவர் மீது, பதாகை வீசி தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது. ஜெயலலிதாவுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும், எல்லா துறைகளை பற்றிய அறிவும், திறமையும் இருந்ததால், அவரை பாராட்டினோம். ஜெயலலிதாவின் ஆளுமையே வேறு. அவரின் நிழலுக்கு கூட, தற்போதைய ஆட்சியாளர்கள் வர மாட்டார்கள். தி.மு.க., கூட்டணி குறித்து, இதுவரையில் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X