அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவில்களில் ஆளுங்கட்சியினர் அட்டகாசம்: சாட்டையை சுழற்றுவாரா முதல்வர்?

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
தமிழக கோவில்களில், அறநிலையத்துறை அதிகாரிகளை மிரட்டுவது, கட்டுப்பாடுகளை மீறுவது என, ஆளுங்கட்சியை சேர்ந்த, உள்ளூர் அரசியல்வாதிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், மக்களிடம் அவப்பெயர் ஏற்படுவதை தடுக்க, சாட்டையை சுழற்றி, முதல்வர் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்துள்ளது.தமிழகத்தில், அறநிலையத்துறை
கோவில்கள்,  ஆளுங்கட்சி, அத்துமீறல், முதல்வர், சாட்டை,

தமிழக கோவில்களில், அறநிலையத்துறை அதிகாரிகளை மிரட்டுவது, கட்டுப்பாடுகளை மீறுவது என, ஆளுங்கட்சியை சேர்ந்த, உள்ளூர் அரசியல்வாதிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், மக்களிடம் அவப்பெயர் ஏற்படுவதை தடுக்க, சாட்டையை சுழற்றி, முதல்வர் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்துள்ளது.

தமிழகத்தில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இவற்றில், பிரசித்தி பெற்ற பெரிய கோவில்கள் நுாற்றுக்கணக்கில் உள்ளன. இதுபோன்ற கோவில்களில், 'நாங்கள் ஆளுங்கட்சியினர்' எனக்கூறி, உள்ளுர் அரசியல்வாதிகளின் செய்யும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


திருவண்ணாமலைஇதற்கு உதாரணம், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடந்த சம்பவம். சில தினங்களுக்கு முன், அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றும் விழா அதிகாலை நடந்தது.கோவில் சம்பிரதாய முறைப்படி, உரிய நேரத்தில் கொடியேற்ற வேண்டும். அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உரிய நேரத்தில் வரவில்லை. நல்லநேரம் முடிந்து விடக்கூடாது என, குறிப்பிட்ட நேரத்தில், சிவாச்சாரியார்கள் கொடியை ஏற்றினர்.

தாமதமாக கட்சியினருடன், அமைச்சர் கோவிலுக்கு வந்தார். அவர் வரும் முன், கொடியேற்றப்பட்டதை அறிந்த, அ.தி.மு.க., நகர செயலர் செல்வம், அமைச்சர் முன் தன் கெத்தை காட்டுவதாக நினைத்து, சிவாச்சாரியார்கள், அறநிலையத்துறை அதிகாரிகளை, அனைவர் முன்னிலையிலும், பகிரங்கமாக மிரட்டினார்.இது, அங்கு குழுமியிருந்த பக்தர்களிடம் அதிருப்தியையும், முக சுளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த கோவிலில், இதுபோன்று ஆளுங்கட்சியினர் ஆதிக்கம், அவ்வப்போது நடந்து வருகிறது.


அத்துமீறல் அதிகரிப்புதமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில், ஆளும் கட்சியினர், உள்ளூர் அரசியல்வாதிகள், தங்கள் அதிகாரத்தை காட்டுவதாக நினைத்து, புனிதமான இடத்தை அசிங்கப்படுத்தி வருகின்றனர்.கட்டுப்பாடு இருந்தும் கருவறை வரை செல்வது; பக்தர்களின் வரிசையை மீறி, எதிர் திசையில் செல்வது; தரிசனத்திற்கான கட்டணம் செலுத்த மறுப்பது; அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், அறநிலையத்துறை அதிகாரிகளை மிரட்டுவது; முறைகேடுகளில் ஈடுபடுவது போன்ற அடாவடி செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக, கும்பாபிஷேகம், திருவிழாக்கள், விஷேச நாட்களில், இவர்களின் அட்டகாசம் எல்லை மீறி செல்கிறது. இது, பக்தர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து, ஆன்மிக நல விரும்பிகள் தரப்பில் கூறியதாவது:கோவிலின் சடங்கு, சம்பிரதாயங்களை, ஆகம விதிகளின்படி முறையாக செய்ய வேண்டும். அதைத்தான் திருவண்ணாமலை கோவிலில், அர்ச்சகர்கள் செய்தனர். ஆனால், அவர்களை அமைச்சருடன் வந்த கட்சி பிரமுகர், பகிரங்கமாக மிரட்டியுள்ளார்.'தாமதமாக வந்த அமைச்சருக்காக, கடவுள் காத்திருக்க வேண்டும்' என்ற ரீதியில், ஆளுங்கட்சி பிரமுரகர் செயல்பட்டது சரியா... மிரட்டியவரை, கட்சி பதவியில் இருந்து, நீக்கியிருக்க வேண்டும்.தேர்தல் நேரத்தில், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதை தடுக்க, முதல்வர் சாட்டையை சுழற்ற வேண்டும். முதல்வர் அப்படி ஒரு நடவடிக்கை எடுத்தால், கோவில்களில் அரசியல்வாதிகளின் அட்டகாசம், அடவாடி குறையும்; அரசுக்கு அவப்பெயர் ஏற்படாது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


latest tamil news

கமிஷனரை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்!அறநிலையத்துறை புதிய கமிஷனராக பொறுப்பேற்ற பிரபாகர், பொறுமை, சிந்தித்து செயல்படுவது; அனைவரையும் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது என, சமார்த்தியமாக செயல்படுகிறார்.சமீபத்தில், நடந்த ஆட்சேபனை கூட்டத்தில், அவரை ஆன்மிக நல விரும்பிகள் மட்டம் தட்டி பேசினாலும், மிகவும் பெருந்தன்மையுடன் சகித்துக் கொண்டார். அறநிலையத்துறை கமிஷனராக இருந்தாலும், சமீபத்தில், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு சென்ற அவர், பக்தர்களோடு பக்தர்களாக வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்து மற்றவர்களுக்கு உதாரணமாக விளங்குகிறார்.

- நமது நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shekar Raghavan - muscat,ஓமன்
22-நவ-202022:42:29 IST Report Abuse
Shekar Raghavan அள்ளி வாழுங்ம் துறை தொடமாட்டார்
Rate this:
Cancel
ravikumark - Chennai,இந்தியா
22-நவ-202021:47:40 IST Report Abuse
ravikumark If Rowdies and coolies and thugs attached to the party continue to do all these nonsense then people will teach them lesson in the upcoming election. Politicians should not be part of religious board. They have got no business. Already corruption is deep routed there.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
22-நவ-202020:17:58 IST Report Abuse
r.sundaram சாமியின் முன்னாலேயே அரசியல் கெத்தா? அவனுக்கு அழிவு காலம் ஆரம்பித்து விட்டது என்று தெரிகிறது. ஹிந்து மதத்துக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை? ஹிந்து கோவில்களை அரசின் பிடியில் இருந்து மீட்க வேண்டும் என்பதற்கு இது ஒரு மிகப்பெரிய சான்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X