இன்றைய 'கிரைம் ரவுண்ட்அப்'

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020
Share
Advertisement
01. ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில், பர்காகனாநகரில் உள்ள சென்ட்ரல் கோல் பீல்ட்ஸ் லிமிடெட் எனும் நிறுவனத்தில், பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார் கிருஷ்ணா ராம் (55 ). இவரது மூத்த மகன் வேலைவாய்ப்பு இல்லாதவர். தந்தையின் வேலையைப் பெறும் நோக்கில் , மகன், தந்தையை , கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். போலீசார் இதனை உறுதி செய்துள்ளனர்.02. திரிபுராவில் அகதிகள்

01. ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில், பர்காகனாநகரில் உள்ள சென்ட்ரல் கோல் பீல்ட்ஸ் லிமிடெட் எனும் நிறுவனத்தில், பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார் கிருஷ்ணா ராம் (55 ). இவரது மூத்த மகன் வேலைவாய்ப்பு இல்லாதவர். தந்தையின் வேலையைப் பெறும் நோக்கில் , மகன், தந்தையை , கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். போலீசார் இதனை உறுதி செய்துள்ளனர்.



latest tamil news



02. திரிபுராவில் அகதிகள் பிரச்சனை தொடர்பான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலியானார்.

03. மேகலாயாவில் சுரங்க மேம்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் போலீசார் மீது கல்வீசப்பட்டது. இதில் 7 போலீசார் காயமுற்றனர்.


latest tamil news



04. போதை மருந்து வழக்கில் மும்பையில் நகைச்சுவை நடிகை பார்தியின் கணவரும் கைது .
05. பீகாரில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை.
06. கேரளா: கன்னணூர் அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் மருத்துவ இறுதியாண்டு மாணவர் தூக்கு போட்டு தற்கொலை.

07. மத்தியபிரதேசம் தேவாசில் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த இளைஞர்களுக்கு போலீசார் தோப்புக்கரணம் போட வைத்து தண்டனை வழங்கினர்.




தமிழக நிகழ்வு



01. திருச்சி, மதுரை ரோட்டில் லாரியை கடத்தி சென்ற திருடனை போலீசார் ஜீப்பில் விரட்டி, மடக்கி பிடித்தனர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

02. ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளைய பகுதியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆறுமுகம் என்ற கட்டட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிச்செட்டிபாளையம் சிறையில் அடைத்தனர்.


உலக நடப்பு


01. லெபனான் நாட்டின் பெய்ரூட் சிறையில் அதிகாரிகளை தாக்கி 70 கைதிகள் தப்பிக்க முயன்றனர். இதில் 15 பேர் பிடிபட்டனர். 5 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.
02. கவுதமாலாவில் ஊழலை ஒழிக்க நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் அரசு பங்களாக்ள் தீக்கிரையாகின.


latest tamil news



03. புளோரிடாவில் பள்ளி குழந்தைகளை ஆபாச படம் எடுத்த ஆசிரியர், பள்ளி தாளாளர் மீது வழக்கு பதியப்ப்பட்டுள்ளது.
04. தெற்கு ஆஸ்திரேலியாவின் மரியான் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 27 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் 3 குழந்தைகள் மர்ம முறையில் இறந்து கிடந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X