சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து : டீசல் கசிவால் பரபரப்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
கோத்தகிரி : கோத்தகிரி அருகே, டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி விபத்துக்குள்ளானதில், டீசல் கசிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.சென்னை துறைமுகம் பகுதியில் இருந்து, ஊட்டி அருகே இடுஹட்டி கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்புவதற்காக, நேற்று முன்தினம் ஒரு டேங்கர் லாரி வந்தது. இரவு 7:00 மணியளவில், கட்டபெட்டு - அருகே பனஹட்டி பாலம் வளைவில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்த
diesel,டீசல்

கோத்தகிரி : கோத்தகிரி அருகே, டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி விபத்துக்குள்ளானதில், டீசல் கசிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை துறைமுகம் பகுதியில் இருந்து, ஊட்டி அருகே இடுஹட்டி கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்புவதற்காக, நேற்று முன்தினம் ஒரு டேங்கர் லாரி வந்தது. இரவு 7:00 மணியளவில், கட்டபெட்டு - அருகே பனஹட்டி பாலம் வளைவில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, தடுப்புச்சுவரை உடைத்து, வலது பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தேயிலை தோட்டத்தில் இருந்த சில்வர் ஓக் மரத்தில் மோதி, தலைக்குப்புற நின்றது. லாரியில் இருந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் செல்வம், 39, மற்றும் கிளீனர் சிறுகாயத்துடன் தப்பினர்.

லாரியில், 12 ஆயிரம் லிட்டர் டீசல் இருந்த நிலையில், இரண்டு இடங்களில் கசிவு ஏற்பட்டது.மாவட்ட தீயணைப்பு அலுவலர் சந்திரகுமார் தலைமையில், 20க்கும் மேற்பட்ட வீரர்கள் நள்ளிரவு வரை, லாரியை மீட்க முயற்சி மேற்கொண்டனர். நேற்று பகல் டீசல் வேறு லாரிக்கு மாற்றி டேங்கர் லாரி மீட்கப்பட்டது. கசிவு ஏற்பட்ட பகுதிகளில் தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். கோத்தகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X