எங்கேயும் எப்போதும் கேட்காத ‛டியூன்': இசையமைக்கும் நடிகர் ஜெய்

Added : நவ 22, 2020
Share
Advertisement
'கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டியிழுத்தாய்' என தன் காந்த கண்களால் ரசிகர்களை கட்டியிழுத்து, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, கலகலப்பு 2 என பல படங்களில் கலக்கி இப்போது தான் நடிக்கும் 'சிவசிவா'வில் இசையமைப்பாளராக பாட்டுக்கு மெட்டு போடும் நடிகர் ஜெய் மனம் திறக்கிறார்.பகவதி படம் முதல் தற்போது நடிக்கும் படம் வரை திரை பயணம்இயக்குனர் வெங்கடேஷ்
எங்கேயும் எப்போதும் கேட்காத  ‛டியூன்': இசையமைக்கும் நடிகர் ஜெய்

'கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டியிழுத்தாய்' என தன் காந்த கண்களால் ரசிகர்களை கட்டியிழுத்து, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, கலகலப்பு 2 என பல படங்களில் கலக்கி இப்போது தான் நடிக்கும் 'சிவசிவா'வில் இசையமைப்பாளராக பாட்டுக்கு மெட்டு போடும் நடிகர் ஜெய் மனம் திறக்கிறார்.


பகவதி படம் முதல் தற்போது நடிக்கும் படம் வரை திரை பயணம்


இயக்குனர் வெங்கடேஷ் 'பகவதி'ல விஜய்க்கு தம்பியாக நடிக்க வைத்தார். அன்று முதல் இன்று வரை பல வெற்றி, தோல்வி பார்த்திருக்கேன். சினிமாவில் நான் இருக்கிறது கடவுள் ஆசிர்வாதம்.


'டிரினிட்டி காலேஜ் ஆப் லண்டன்'ல மியூசிக் படிச்ச நீங்க இசையமைப்பாளராஆனது


இசை ஈஸி இல்லை... இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள், ரசிகர்களுக்கு பாட்டு பிடிக்கனும். நடிச்சுக்கிட்டு இசையமைக்க கொஞ்சம் காலம் தேவைப்பட்டது. கொரோனா நேரம் நிறைய பாட்டு கம்போஸ் பண்ணும் போது இயக்குனர் சுசீந்திரன் 'சிவசிவா' படத்தில் நடிக்க, இசைக்க வைத்தார்.


சுசீந்திரன், ஜெய் இணையும் படத்தில் நடிப்பது, இசையமைப்பது குறித்து


ஒரு இயக்குனர் தினமும் சாப்டீங்களானு கேட்பாங்களா தெரியல. ஆனால் சுசி கேப்பாரு. மக்களுக்கு பிடிச்சு திரும்ப திரும்ப அந்த பாட்டு கேக்கணும். என் படம் என்பதால் ஸ்பெஷலா எதுவும் இசை அமைக்கலை. எனக்காக இல்லாமல் படத்தின் ஹீரோவுகாக இசையமைக்கிறேன்.


உங்க குடும்பமே இசை குடும்பமாக இருக்கும் போது உங்கள் இசை குறித்த ஆலோசனை


தேவா, சபேஷ் முரளி, ஸ்ரீகாந்த் தேவா, போபோ சசி... என் முதல் உறவுகள். படப்பிடிப்பு நடக்கும் போது கம்போஸ் பண்ணி போபோ சசி, ஸ்ரீகாந்த் தேவா, சபேஷ் முரளிக்கு போட்டு காட்டினேன் இதுவரை எங்கேயும் கேட்காத டியூனா இருக்குதுன்னு சொன்னாங்க.


நீங்கள் நடித்த படங்களில் பெரிய திருப்பம் கொடுத்த படங்கள்



'எனக்கு வாய்த்த அடிமைகள்' நடித்த பின் இவ்வளவு தரமான படம் பண்ண முடியும்னு தெரிஞ்சது. மீரா கதிரவனின் 'அவள் பெயர் தமிழரசி', துபாய் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் 2010ல் தேர்வானது, வெளிநாட்டு இயக்குனர்கள் என்னை பாராட்டினாங்க. பெரிய விருது வாங்காத எனக்கு அவர்கள் பாராட்டு பெரிய விருதாக தெரிஞ்சது.


பகவதி படத்திற்கு பின் 'சென்னை 28' ல் நடிக்க எப்படி வாய்ப்பு கிடைத்தது


இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பாளரிடம் பேசி இந்த படத்தில் நடிக்க வைச்சாரு. வாழ்க்கையில எங்கே போக போறோம்னு தெரியாமல் நின்ற நேரம் 'வா உனக்கு ஒரு வழியை காட்டுறேனு கை பிடித்து கூட்டிட்டு போனார் வெங்கட்பிரபு.


ஜெய் மார்க்கெட் நிலவரம் கூடி இருக்கா இல்ல அப்படியே தான் இருக்கா


'சென்னை 28'ல் ஆரம்பிச்சு இப்போ வரை என் படங்களுக்கு மார்க்கெட். சம்பள நிலவரம் தெரியாது. நிறைய சம்பளம், குறைந்த சம்பளம்னு வேலை பார்க்கிறது இல்லை. எல்லா படத்துக்கும் எல்லா சம்பளத்துக்கும் 100 சதவீதம் உழைக்கிறேன்.


வெப்சீரிஸ்-ல் நடித்த அனுபவம்


கார்த்திக் சுப்புராஜின் வெப் சீரிஸ்சில் நடிக்கிறேன். படத்துக்கும், வெப்சீரிஸ்க்கும் வித்தியாசம் இல்லை. இது ஒரு நல்ல அனுபவம்


நீங்க, பிரேம்ஜி எல்லாம் எப்போ தான் கல்யாணம் பண்ண போறீங்க


கல்யாணம் பற்றி கேட்டாலே ஆர்யாவை தான் சொல்வேன், ஆனால் அவர் இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணுவார்னு எதிர்பார்க்கலை, அடுத்து சிம்புவை தான் நான் கை காட்டணும். பிரேம்ஜி கல்யாணத்தை பற்றி அவரை படைத்த கடவுளுக்கே தெரியாது.


உங்கள் நடிப்பில் அடுத்து ரிலீஸ் ஆகும் படங்கள்


'அறம்' கோபி நயினாருடன் ஒன்று, 'எண்ணித் துணிக' 'பிரேக்கிங் நியூஸ்' வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி' கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கிறேன். விரைவில் எல்லாரும் எதிர்பார்க்கும் ஒரு படத்தின் அறிவிப்பு வரும்.
-கவி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X