பொது செய்தி

தமிழ்நாடு

மலைக் கிராமங்களில் 'உலை' கொதிக்க உதவிய பேராசிரியர்

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கொரோனா காலத்தில் பல்வேறு களப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், சமூக அமைப்புகள் நகர்ப்புற ஏழை எளியோருக்கு உதவினர். அந்நேரம் மலைவாழ் மக்களைப் பற்றி நாம் சிந்தித்திருக்க மாட்டோம். அவர்களுக்கும் உதவி செய்யும் பொருட்டு மலைகளுக்கு பயணம் மேற்கொண்டு உதவிகளை செய்து வருகிறார் பழநி கல்லுாரி பேராசிரியர் தமிழ்நாயகம்.பதினைந்து ஆண்டுகளாக பழநி அருகே அணைக்கட்டுகள், நீர்நிலைகளில்
மலைக்கிராமங்கள், பேராசிரியர்

கொரோனா காலத்தில் பல்வேறு களப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், சமூக அமைப்புகள் நகர்ப்புற ஏழை எளியோருக்கு உதவினர். அந்நேரம் மலைவாழ் மக்களைப் பற்றி நாம் சிந்தித்திருக்க மாட்டோம். அவர்களுக்கும் உதவி செய்யும் பொருட்டு மலைகளுக்கு பயணம் மேற்கொண்டு உதவிகளை செய்து வருகிறார் பழநி கல்லுாரி பேராசிரியர் தமிழ்நாயகம்.

பதினைந்து ஆண்டுகளாக பழநி அருகே அணைக்கட்டுகள், நீர்நிலைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களை இளைஞர்கள், வனத்துறையினருடன் இணைந்து துாய்மைப்படுத்தி வருகிறர் தமிழ்நாயகம்.ஊரடங்கு காலத்தில் மலைப்பகுதிகளில் சிரமப்படும் பளியர் சமூகத்தினருக்கு உதவுமாறு வனத்துறையினர் இவரிடம் கேட்டனர். இதையடுத்து சேவை அமைப்பான "சேவாபாரதி"க்கு தமிழ்நாயகம் கோரிக்கை விடுத்தார். அவர்கள் அளித்த நிவாரணப் பொருட்களுடன், வனத்துறை, வருவாய் துறை மற்றும் சத்தியமங்கலம் அதிரடிப்படையினரின் தலைமையில் சேவையை துவக்கினார். மொத்தமுள்ள 80 மலைக்கிராமங்களில் 47 கிராமங்களுக்கு உணவுப் பொருள், போர்வை, துண்டு, சேலை என தேவையானவற்றை வழங்கினார். மேலும் வனத்துறையினர் உடன் இணைந்து காடுகளில் விதைப்பந்து வீசுதல், மரம் நடுதல் போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளார்.

பழநி - கொடைக்கானல் சாலையின் இருபுறமும் வீசப்படும் டாஸ்மாக் பாட்டில்களை, இவர் அப்புறப்படுத்தி வருவதும் வரவேற்கக்கூடியதாகும். இது போன்ற சேவை காரியங்களைக் கண்ட, சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், தேசபக்தர்கள் அனைவரும் சேவாபாரதி மூலம் மலைக் கிராமத்தினருக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

தமிழ்நாயகத்திடம் கேட்டபோது, ''நான் ஒருங்கிணைப்பு பணி மட்டுமே மேற்கொண்டு வருகிறேன். கொடைக்கானலை சுற்றி 20 மாவட்ட விவசாயிகள், மக்கள், இந்தமலையையே நம்பி உள்ளனர். நீர் ஆதாரத்தின் மூலமாக விளங்கும் கொடைக்கானல் மலையை, பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பதன் மூலம் நீராதாரத்தை பெருக்க முடியும்'' என்றார்.

சம்யூ

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-நவ-202018:37:26 IST Report Abuse
ருத்ரா வாழ்த்துக்கள் சார் அன்னம் தரும் தாயுமானவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X