பொது செய்தி

தமிழ்நாடு

வறுமை வாட்டினால் என்ன ஊருக்கு உதவும் மனசு இருக்கே! பாருங்கள் பாக்கியலட்சுமியின் சேவையை

Added : நவ 22, 2020
Share
Advertisement
இருப்பவர்கள் அள்ளிக் கொடுப்பதில் பெருமையில்லை. தனக்கே ஒன்றுமில்லாத போது ஊருக்காக கொடுத்து உதவுவதற்கு தைரியமும், தன்னம்பிக்கையும் வேண்டும். அத்தகைய தன்னம்பிக்கை மிக்க சிங்கப்பெண்ணாக திகழ்கிறார், தஞ்சை மாவட்டம் பேராவூரணி நாடாகாடு கிராமத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமி.கணவரை இழந்த நிலையில், பெண் குழந்தையோடு போராடும் பாக்கியலட்சுமி, தனக்கு கிடைத்த விவசாய நிவாரணத்
பாக்கியலட்சுமி, உதவி

இருப்பவர்கள் அள்ளிக் கொடுப்பதில் பெருமையில்லை. தனக்கே ஒன்றுமில்லாத போது ஊருக்காக கொடுத்து உதவுவதற்கு தைரியமும், தன்னம்பிக்கையும் வேண்டும். அத்தகைய தன்னம்பிக்கை மிக்க சிங்கப்பெண்ணாக திகழ்கிறார், தஞ்சை மாவட்டம் பேராவூரணி நாடாகாடு கிராமத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமி.

கணவரை இழந்த நிலையில், பெண் குழந்தையோடு போராடும் பாக்கியலட்சுமி, தனக்கு கிடைத்த விவசாய நிவாரணத் தொகையான ரூ.ஒன்றரை லட்சத்தை, அரசுப்பள்ளி வாலிபால் மாணவிகளுக்காக அரங்கு அமைத்து கொடுத்து நிமிர்ந்து நிற்கிறார்.வறுமையோடு வாழ்ந்தாலும் விளையாட்டுக்கு உதவியது எப்படி… அவரே சொல்கிறார்.

பெத்தவங்க செண்பகவள்ளி, சிங்காரம். எனக்கு நாலு அண்ணன்கள். நான் பிறந்த 6 மாசத்துல அப்பா இறந்துட்டார். அம்மா கூலி வேலை பார்த்து எல்லோரையும் பிளஸ் 2 வரை படிக்க வச்சாங்க. பேராவூரணி ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லுாரியில் கெமிஸ்ட்ரி படிச்சேன். பீஸ் கட்ட முடியாத அளவு வறுமை. ரெண்டு வருஷம் அப்போ கல்லுாரி முதல்வரா இருந்த மெய்ப்பொருள் என்பவர் தான் கட்டினார். அதுக்கப்புறம் எம்.எஸ்.சி., பி.எட்., படிச்சு டீச்சரானேன். பணத்தை கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சு, அவர் கிட்ட கொடுத்தப்போ அவர் வாங்கிக்கல.

'இந்தப் பணம் இப்போ எனக்கு தேவையில்ல. தேவைப்படுறவங்களுக்கு செய். உன்னால எப்ப முடியுதோ அப்ப செய்'னு சொன்னாரு. அந்தநேரம் பணத்தேவை இருந்ததால், அவர்கிட்ட கொடுக்க வேண்டிய தொகையை செலவு பண்ணிட்டோம். ஆனா அவர் சொன்ன வார்த்தை மட்டும் உறுத்திட்டே இருந்துச்சு. 2004ல் அவர் இறந்திட்டார்.அப்புறம் எனக்கு கல்யாணம் முடிஞ்சு விவசாய குடும்பத்துக்கு வந்துட்டேன். தனியார் பள்ளியில் டீச்சரா வேலை பார்த்துட்டு இருந்தேன். கணவர் திருநீலகண்டர் விபத்துல திடீர்னு இறந்தப்போ என் மகள் சாம்பவிக்கு அஞ்சு வயசு. பச்சப்புள்ளைய யார்கிட்டயும் கொடுக்க முடியல. அதனால வேலைக்கு போகல. கணவரோட ஒன்றரை ஏக்கர் தென்னந்தோப்பும், கூரைவீடும் இருந்துச்சு. ஆனா பாதுகாப்பில்லாததால் அம்மா வீட்டுக்கு வந்துட்டேன்.

அங்க இருந்தே தென்னந்தோப்பை பார்த்துக்கிட்டேன். 2018ல் வந்த கஜா புயல் தென்னை மரங்களை வேரோடு சாய்ச்சுருச்சு. ஒரே ஆதாரமா இருந்த வருமானமும் போச்சு. மறுபடியும் தென்னை நட்டு ஊடுபயிரா உளுந்து போட்டுட்டு இருக்கேன்.2019 மார்ச்சுல தமிழக அரசு ஒன்றரை லட்ச ரூபா நிவாரணம் கொடுத்துச்சு. அந்த பணத்தை வாங்கினப்போ, கல்லுாரி முதல்வர் மெய்ப்பொருள் சொன்ன வார்த்தை ஞாபகம் வந்துச்சு. என்ன செய்யலாம்னு யோசிச்சேன்.என் கிராமத்திலிருந்து 2018, 2019ல் ரெண்டு பொண்ணுங்க தேசிய வாலிபால் போட்டிக்கு போயிருக்காங்க. இப்போ 60 பேர் பயிற்சி எடுத்திட்டு இருக்காங்க. ஆனா எங்க ஊரு அரசுப் பள்ளியில் வாலிபால் அரங்கு இல்ல. வேற கிரவுண்ட்ல போய் பிராக்டீஸ் பண்ணுவாங்க. சில சமயம் பாதுகாப்பு இல்லைனு பெத்தவங்க அனுப்ப மாட்டாங்க. நல்லா விளையாடுற பிள்ளைங்களை தனியார் பள்ளிகள் அழைச்சிட்டு போய்ருவாங்க. பேராவூரணி பள்ளியில் ஒரு வாலிபால் அரங்கு போடாலாம்னு தோணுச்சு.

கோச் நீலகண்டன், பூக்கடை வைத்துள்ள வாலிபால் பிளேயர் பாரதிதாசன்கிட்ட பேசினேன். அவங்க தலைமையாசிரியை கஜானா தேவிகிட்ட அழைச்சுட்டு போனாங்க. அவங்க பணம் வாங்கிக்கல. நீங்களே எல்லா வேலைகளையும் செஞ்சு கொடுங்கனு சந்தோஷமா சொன்னாங்க. முள்ளு, புதரை சுத்தம் பண்ணி செம்மண் அடிச்சு வேலி போட்டு தயார் பண்ணிட்டேன். போஸ்ட் கம்பியும், வலையும் போடுற நேரத்துல கொரோனா வந்து, வேலை நின்னு போச்சு. மாணவிகள் விளையாடியிருந்தா தரை சுத்தமாயிருக்கும். இப்போ மறுபடியும் புதர் மண்ட ஆரம்பிச்சுருச்சு. பள்ளி எப்போ திறக்கும்னு சொல்றாங்களோ, அதுக்கு முன்னால போஸ்ட், வலை தயார் பண்ணிடுவேன். மாணவிகள் எப்ப விளையாடுறாங்களோ அப்பத்தான் என் மனசுக்கு நிம்மதியா இருக்கும். அந்த நாளுக்காக காத்திட்டு இருக்கேன் என்றார்.
இவரைப் பாராட்ட 94442 67525.
-எம்.எம்.ஜெ.,

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X