பொது செய்தி

இந்தியா

12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்!

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020
Share
Advertisement
திங்கள் முதல் ஞாயிறு வரை (23.11.2020 - 29.11.2020) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள். மேஷம்சந்திரன், சுக்கிரன், புதன் சாதக நிலையில் உள்ளனர். அனுமன் வழிபாடு வெற்றி தரும்.அசுவினி: வீண் அலைச்சல் இருக்கும். அரசியல்வாதிகள் பிறரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. தொலை துாரத் செய்திகள் நல்லவையாக இருக்கும்.
வாரபலன், பரிகாரம், மேஷம், ரிஷபம், மிதுனம்,  கடகம், சிம்மம்,  கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம், கும்பம், மீனம்

திங்கள் முதல் ஞாயிறு வரை (23.11.2020 - 29.11.2020) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்



சந்திரன், சுக்கிரன், புதன் சாதக நிலையில் உள்ளனர். அனுமன் வழிபாடு வெற்றி தரும்.

அசுவினி: வீண் அலைச்சல் இருக்கும். அரசியல்வாதிகள் பிறரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. தொலை துாரத் செய்திகள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. பெற்றோரின் உடல் நலம் சீராகும்.

பரணி: கலைத்துறையினர் கோபமாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. பணியாளர்களுக்கு மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் ஏற்படலாம். பெண்கள் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

கார்த்திகை 1: இந்த வாரம் எந்த வேலையாக இருந்தாலும் நிதானத்துடன் செயல்படுவது அவசியம். மனசஞ்சலம் ஏற்பட வாய்ப்புள்ளதால் முடிவுகளை எடுக்க தடுமாறுவீர்கள். சேமிப்பில் ஆர்வம் கொள்வீர்கள்.


ரிஷபம்




latest tamil news



புதன், குரு, செவ்வாயால் நன்மை கிடைக்கும். குரு வழிபாடு சுபவாழ்வு அளிக்கும்.

கார்த்திகை 2,3,4: காதல், திருமண விஷயத்தில் முக்கிய முடிவு எடுப்பதை ஒத்தி வைப்பது நல்லது. குடும்ப பெரியவர் ஒருவரை பற்றி கவலை ஏற்படக்கூடும். நிதி விஷயங்களில் கவனமாக இருக்கவும்.

ரோகிணி: இழப்புகளை சரி செய்வீர்கள். செலவு செய்யும் முன் யோசியுங்கள். அடுத்த சில வாரங்களில் உங்கள் சேமிப்பு பணம் பயன்படும் நிலை ஏற்படும். இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். பகை மாறி நட்பாகும்.

மிருகசீரிடம் 1,2: பல வேலைகள் தடைப்பட்டு முடியும். குடும்பத்தினர் உங்கள் நிறை, குறைகளை எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள்.


மிதுனம்



சுக்கிரன், சந்திரன் உதவிகரமான அமைப்பில் உள்ளனர். கிருஷ்ணர் வழிபாடு முன்னேற்றம் தரும்.

மிருகசீரிடம் 3,4: அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்க வேண்டாம். சிலருக்கு தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும்.

திருவாதிரை: சிறு மருத்துவச் செலவு ஏற்படலாம். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உங்கள் பக்க நியாயம் பிறருக்கு தெரிய வரும்.

புனர்பூசம் 1,2,3: தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டியிருக்கும். பெண்கள் வகையில் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்ற நிலை இருக்கும். உணர்ச்சிவசப்படக் கூடிய நிலை உருவாகும்.


கடகம்



குரு, புதன், சுக்கிரனால் அளப்பரிய நன்மை கிடைக்கும். பைரவர் வழிபாடு பல நன்மைகள் தரும்.

புனர்பூசம் 4: கொடுத்த வாக்கை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் நன்மை அடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும்.

பூசம்: உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வியாபார நடைமுறையை மாற்றுவீர்கள். பணியிடத்தில் சவாலான வேலைகளை எடுத்து திறம்பட செய்து முடிப்பீர்கள்.

ஆயில்யம்: கடமை உணர்வுடன் செயல்படுவீரகள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். இந்த வாரம் செலவு கூடும். திட்டமிட்ட பயணத்தை தவிர்ப்பது நல்லது. பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் முன் கவனம் அவசியம்.

சந்திராஷ்டமம்: 23.11.2020 காலை 6:00 - 24.11.2020 மதியம் 12:49 மணி


சிம்மம்



புதன், சுக்கிரன் அதிர்ஷ்டகர பலன்களை வழங்குவர். சிவன் வழிபாடு சிரமத்தை போக்கும்.

மகம்: மருத்துவ சிகிச்சை எடுக்க திட்டமிட்டிருந்தால் அது உங்களுக்கு நல்ல பலனை தரும். நீங்கள் முன்னெடுத்த விஷயத்தில் சிறிய தடைக்கு பிறகு வெற்றி அடைவீர்கள். நண்பர்கள் உதவி செய்வர்.

பூரம்: பெற்றோர் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தினருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். சிலருக்கு பணிச்சுமை அதிகமாகலாம்.

உத்திரம் 1: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திட்டமிட்ட பயணங்களை தவிர்ப்பது நல்லது. வார இறுதியில் நீங்கள் நிறைய வேலைகளில் மும்மரமாக இருப்பீர்கள்.

சந்திராஷ்டமம்: 24.11.2020 மதியம் 12:50 - 26.11.2020 இரவு 11:53 மணி


கன்னி



புதன், சுக்கிரன், நற்பலன் வழங்குவர். காமாட்சி வழிபாடு சுபிட்சம் தரும்.

உத்திரம் 2,3,4: குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கூடுதல் பண வரவால் சந்தோஷம் அடைவீர்கள். நம்பிக்கையுடன் உங்கள் பணிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்கள், உறவினர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.

அஸ்தம்: குடும்பத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி உண்டு. உறவினர் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

சித்திரை 1,2: முயற்சிகள் மெல்ல வடிவெடுத்து நல்லபடியாக முடியும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் உதயமாகும். புதிய தொழில் முயற்சிகள் லாபம் தருவதாக அமையும்.

சந்திராஷ்டமம்: 26.11.2020 இரவு 11:54 - 29.11.2020 காலை 11:36 மணி


துலாம்



குரு, சந்திரன், செவ்வாய் அனுகூல பலனை தருவர். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.

சித்திரை 3,4: குடும்பத்தினருடன் குறைவான நேரம் செலவிடக் கூடிய சூழல் அமையலாம். பிள்ளைகள் மூலம் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுடன் பழைய நினைவுகளை பேசி மகிழ்வீர்கள்.

சுவாதி: ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொலைதுாரத் தொடர்பு பயன்படும். வியாபாரிகளுக்கு மன அமைதி மீளும். உடல் நலனில் கவனம் தேவைப்படும். பணியில் முழுக்கவனம் தேவை.

விசாகம் 1,2,3: உங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். இதுவரை அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்னை நீங்கும். மனதில் நிம்மதி கூடும்.

சந்திராஷ்டமம்: 29.11.2020 காலை 11:37 மணி - நாள் முழுவதும்


விருச்சிகம்



புதன், சந்திரன் நன்மை அளிக்கும் இடத்தில் உள்ளனர். சாஸ்தா வழிபாடு துன்பம் போக்கும்.

விசாகம் 4: திருமணம் நடக்கப்பெறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். தந்தை வழி உறவினர் மூலம் நன்மை நடக்கும். பெற்றோர் ஆலோசனையின் படி செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

அனுஷம்: சிந்தனையில் தெளிவு உண்டாகும். உடன்பிறந்தோர், நண்பர்களால் நன்மை அடைவீர்கள். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். நிலுவைப் பணிகளை செய்து முடிப்பீர்கள்.

கேட்டை: புதிய முதலீடுகளில் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தர்மச் செயல்களில் ஈடுபடுவீர்கள். மன அழுத்தம் மறையும்.


தனுசு



சுக்கிரன், சந்திரன், கேது அதிர்ஷ்டகர பலன்களை தருவர். சூரியன் வழிபாடு வளம் தரும்.

மூலம்: புதிய சொத்துகள் வாங்குவீர்கள். தோற்றத்தில் பொலிவு உண்டாகும். புத்திசாலிகளின் நட்பைப் பெற்று பலன் அடைவீர்கள். கவலைகள் மறைந்து மகிழ்ச்சி பிறக்கும். ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபாடு கொள்வீர்கள்.

பூராடம்: வியாபாரம் சூடுபிடிக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். ஆராய்ச்சி மாணவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை அடைவார்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த சிக்கல் தீரும்.

உத்திராடம் 1: கணவரின் முயற்சியால் குடும்ப நிலை உயரும். வீட்டில் சுபச்செலவுகள் ஏற்படும். வாகன சேர்க்கை உண்டு. பெண்கள் தங்கம், வெள்ளி பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரிகளுக்கு தன வரவு திருப்தி தரும்.


மகரம்



சூரியன், கேது, சுக்கிரன் அனுகூல அமர்வில் உள்ளனர். சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

உத்திராடம் 2,3,4: சகபணியாளர்களுடன் மகிழ்ச்சியான உரையாடல் உண்டு. சேமிப்பில் முன்னேற்றம் காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பெற்றோர், நண்பர்கள் மூலம் ஏற்பட்ட மனவருத்தம் நீங்கும்.

திருவோணம்: பொருளாதார சிக்கல் மறையும் அளவுக்கு வரவு உண்டாகும். வியாபாரிகள் குறைந்த அளவு முதலீட்டில் அதிக லாபத்தை அள்ளுவீர்கள். எண்ணங்களுக்கு தகுந்த செயல் வடிவம் கொடுப்பீர்கள். உடல் உபாதைகள் தீரும்.

அவிட்டம் 1,2: விட்டுக்கொடுத்து செல்ல வேண்டியிருக்கும். பிள்ளைகள் மூலம் கூடுதல் செலவு ஏற்படும். பெற்றோரின் உடல் நிலை திருப்தி தரும். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது.


கும்பம்



சனி, குரு, சந்திரன் நற்பலன்களை தருவர். விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

அவிட்டம் 3,4: வீண் வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். அலைச்சல் தந்த செயல்கள் நல்லபடியாக முடியும். கடனாக கொடுத்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். நகை வியாபாரிகளுக்கு முன்னேற்றமான வாரம்.

சதயம்: சென்ற இடமெல்லாம் பிரச்னை என்றிருந்த நிலை மாறும். வேலை மாற்றம் குறித்து விஷயம் தெரிந்தவர்களின் ஆலோசனையை எடுத்துக் கொள்ளுங்கள். புதிய முதலீடுகளை ஆராய்ந்து செய்யவும்.

பூரட்டாதி 1,2,3: மேலதிகாரிகளிடம் விட்டுகொடுத்து சென்று நிம்மதி அடைவீர்கள். அரிய செயல்களை செய்து நற்பெயர் எடுப்பீர்கள். விருந்தினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும்.


மீனம்



குரு, ராகு, சந்திரன் அனுகூல பலனைத் தருவர். துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

பூரட்டாதி 4: உடன்பிறந்தோரால் சிறிதளவு ஆதாயம் உண்டு. கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் வரும். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர்.

உத்திரட்டாதி: விடாமுயற்சியால் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். புதிய திட்டங்கள் தாமதமாகும். குழந்தைகள் உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. கடன் தீரும். தம்பதி இடையே நெருக்கம் குறையும்.

ரேவதி: மனம் விரும்பிய வீட்டிற்கு குடி பெயர்வீர்கள். உயர்ந்தோரின் நட்பைப் பெற்று கவுரவக் குறைவு ஏற்படாமல் காக்கப்படுவீர்கள். உடலில் ஏற்படும் சிறுஉபாதைகளால் தொல்லை ஏற்படும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X