சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீவி., பேயனாற்றில் குளிக்க தடை: செக்போஸ்ட் அமைத்து கண்காணிப்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகதோப்பு பேயனாற்று வெள்ளத்தில் சிக்கி மூவர் உயிரிழந்ததையடுத்து அங்கு குளிக்க பொதுமக்களுக்கு தடைவிதிக்கபட்டுள்ளது.இதோடு செக்போஸ்ட் அமைத்து கூடுதல் போலீஸ் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் பெய்த மழையால் பேயனாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.



ஸ்ரீவில்லிபுத்துார்:
ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகதோப்பு பேயனாற்று வெள்ளத்தில் சிக்கி மூவர் உயிரிழந்ததையடுத்து அங்கு குளிக்க பொதுமக்களுக்கு தடைவிதிக்கபட்டுள்ளது.
இதோடு செக்போஸ்ட் அமைத்து கூடுதல் போலீஸ் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் பெய்த மழையால் பேயனாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோட்டைபட்டியை சேர்ந்த 3 இளைஞர்கள், வெள்ளத்தில் சிக்கி பலியானதையடுத்து செண்பகதோப்பு நுழைவுப்பாதையில் வனத்துறை செக்போஸ்ட் அமைத்து வனத்துறையினர் மற்றும் போலீசார் குவிக்கபட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீர்வரத்து இருப்பதால் பேயனாற்றில் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கபட்டுள்ளது.
பேச்சியம்மன் கோயிலிருந்து மம்சாபுரம் வேப்பங்குளம் வரை நீர்வரத்து பாதையில் யாரும் இறங்கி குளிக்கிறார்களா என்பதும் கண்காணிக்கப்படுகிறது.
இதேபோல் மம்சாபுரம் வேப்பங்குளம், வாழைக்குளம், முதலியார்குளம், அமுதகுளம் கண்மாய்கள் நிரம்பியதால் அங்கும் போலீசார் குவிக்கபட்டு குளிக்க வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X