பொது செய்தி

தமிழ்நாடு

பழநியில் பாண்டவர் தங்கிய ஐவர் மலை

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மலைக்கோட்டை, பழநி மலை, திண்டுக்கல் போர்க்களமாக இருந்ததை உறுதிப்படுத்தும் நல்லமனார் கோட்டை கல்வெட்டு, தொட்ட இடமெல்லாம் தொல்லியல் ஆதாரங்களாக கிடைக்கும் தொட்டணம்பட்டி, சித்தர்களின் வாழ்விடமான பழநி மலைப்பகுதிகள் என பல பொக்கிஷங்கள் உள்ளன. கூடுதலாக சமணர்கள், சித்தர்கள், கோயில்கள், சுனைகள் போன்றவற்றை சுமந்து நிற்கும் ஐவர் மலையும்
பழநியில் பாண்டவர் தங்கிய ஐவர் மலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மலைக்கோட்டை, பழநி மலை, திண்டுக்கல் போர்க்களமாக இருந்ததை உறுதிப்படுத்தும் நல்லமனார் கோட்டை கல்வெட்டு, தொட்ட இடமெல்லாம் தொல்லியல் ஆதாரங்களாக கிடைக்கும் தொட்டணம்பட்டி, சித்தர்களின் வாழ்விடமான பழநி மலைப்பகுதிகள் என பல பொக்கிஷங்கள் உள்ளன. கூடுதலாக சமணர்கள், சித்தர்கள், கோயில்கள், சுனைகள் போன்றவற்றை சுமந்து நிற்கும் ஐவர் மலையும் வற்றாத தகவல் களஞ்சியமாக உள்ளது.

பழநி - கொழுமம் சாலையில் வலது புறத்தில் இரண்டு மலைகளை காணலாம். ஒன்று பெரிய ஐவர் மலை. மற்றொன்று சிறிய ஐவர் மலை. முன்பு இம்மலை 'அயிரை மலை' என அழைக்கப்பட்டுள்ளது.'பாண்டவர்கள் வனவாசத்தின் போது இங்கு தங்கினர், அர்ச்சுனன் இங்குதான் பாசுபதம் பெற்றான்' என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. எனவே, பஞ்சபாண்டவர் மலை அல்லது ஐவர் மலை என்றானதாக கூறுகின்றனர்.இங்கு திரவுபதி அம்மன் கோயில், இடும்பன் சன்னதி, வள்ளலார் ஜோதி மண்டபம், குழந்தை வேலப்பர் கோயில், உச்சி பிள்ளையார் கோயில் என ஐந்து கோயில்கள் பல்வேறு உயரங்களில் அமைந்துள்ளன. பெரிய சுவாமி என்ற முனிவரின் சமாதி, நாராயண பரதேசி சமாதி என இங்கு தவம் செய்து ஜீவசமாதியானதும், இவர்கள் தவம் செய்த குகைகளும் உள்ளன.படிக்கட்டு தொடங்குமிடத்தில் உள்ள கல்வெட்டு, மலையின் தொன்மை, சிறப்பு, சமணர் பள்ளிகள், இரண்டாம் வரகுண பாண்டியனின் கல்வெட்டு பற்றிய செய்திகளை தாங்கி நிற்கிறது.ஆடி அமாவாசை, கார்த்திகை போன்ற நாட்களில் இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். பல சமுதாயத்தினர் திரவுபதி அம்மனை குலதெய்வமாக வழிபட்டு ஆண்டுதோறும் திருவிழா நடத்துகின்றனர்.


latest tamil news

ஐவர் மலை அமைப்புஐவர் மலை கடல் மட்டத்திலிருந்து 1400 அடி வடக்கு தெற்காக அமைந்துள்ளது. மலை இரு பிரிவுகளாக பிரித்திருப்பது போல் இடைவெளியில் வழியும், வழியின் தெற்கு பகுதி உச்சியில் பிள்ளையார் கோயிலும், வடக்கு திசையில் இராமானுஜர் மடமும், தண்டபாணி கோயிலும் உள்ளன. தெற்கு திசையில் இயற்கையாகவே குகைத்தளம் 16 அடி நீளமும், 13 அடி உயரத்திலும் உள்ளது.இந்த மலையின் உள்பகுதியில் பெரிய குகைகள் இருந்திருக்கலாம். காற்று உள்ளே சென்று வரும் அளவு மலையைச் சுற்றிலும் ஓட்டைகள் உள்ளன. பெரிய குகைகள் மலையைச் சுற்றிலும் உள்ளது. பல குகைகள் அடைபட்டு கிடக்கிறது. இங்கு இன்னமும் சித்தர்கள் உள்ளே இருப்பதாக நம்புகின்றனர்.


latest tamil news


Advertisementசமணர்கள் குகைகள்குகைகளுக்குள்ளே சமணர்கள் வாழ்ந்த கற்படுகைகள் உள்ளன. அதற்கு சான்றாக இங்குள்ள திரவுபதி அம்மன் கோயிலின் வெளிப்பகுதியில், 15 சமண தீர்த்தங்கரர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.சமண துறவிகள் ஐவர் மலையில் தங்கி சமணப் பள்ளிகளை துவக்கி தவ வாழ்வை மேற்கொண்டுள்ளனர். குகை பகுதிகள் இயற்கை பாதுகாப்புடன் அமைந்துள்ளன. மழைக்காலங்களில் நீர் புகாதவாறு, காற்றோட்டத்துடன் வெளிச்சமாக உள்ளது. இம்மலையில் புஷ்கரிணிகள் எனப்படும் 2 சுனைகள் உள்ளன. ஒன்று தாமரை மலர்களுடன், மற்றொன்று அல்லி மலர்களுடன் உள்ளது. சூரிய கதிர்கள் தாமரை மீதும், சந்திர கதிர்கள் அல்லி மீதும் விழும்படியாக அமைந்துள்ளது. நாரயணபரதேசி என்பவர் 100 வருடங்களுக்கு முன்பாக வந்து இங்கேயே முக்தியடைந்துள்ளார். பெரிய சுவாமி என்பவர் இம்மலையில் பலருக்கு தியானம், யோகா கற்பித்து இங்கேயே முக்திஅடைந்துள்ளார்.


latest tamil news
ஐவர்மலையில் இன்றுதற்போது திரவுபதி, முருகன், இராமலிங்க அடிகள் வழிபாடுதான் சிறப்பாக உள்ளது. இவ்வட்டாரத்தில் உள்ளவர்கள் திருமணங்களை இங்குதான் நடத்துகின்றனர். சிவராத்திரி விழாவும் ஆண்டுதோறும் சிறப்பாக நடக்கிறது. அதற்கு வேண்டிய பொருளுதவி பக்கத்து ஊர்மக்களாலும், பாப்பம்பட்டி ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் செய்து கொடுக்கின்றனர்.ஐவர் மலைக்கு செல்ல வசதியான சாலை இல்லை. முன்பு பஸ் வசதி இருந்தது. தற்போது அதுவுமில்லை. இதனை சுற்றுலாத் தலமாக மாற்றினால், எழில் கொஞ்சும் இயற்கை வளங்களுக்கு நடுவே உள்ள இம்மலை பயணிகளை அதிகம் கவரும் என்பதில் ஐயமில்லை.


latest tamil news
முருகன் சிலை வடிவமைப்புகருப்புச்சாமி என்பவர் கூறியதாவது: இங்கு சித்தர்கள் வாழ்கின்றனர். அதற்கான குகைகள் மலைகளைச் சுற்றி உள்ளது. சிவ தொண்டர்கள் பலர் வருவர். பழநி முருகன் சிலையை போகர் இங்கு வைத்தே வடித்ததாக நம்பப்படுகிறது. இங்குள்ள சுனைகள் இதுவரை வற்றியதே இல்லை.


latest tamil news
வெளிநாட்டவர் வருகைகோயில் பூசாரி பழனிச்சாமி கூறியதாவது: சமணர் இங்கு தங்கி பள்ளிச்சாலை நடத்தியதாகவும், சித்தர்கள் இன்றும் வாழ்வதாகவும் பலரும் கூறுகின்றனர். தமிழகம், கேரளா பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டவரும் இங்கு தியானம் செய்வர்.

ஆறுமுகப்பாண்டி
படம் : மணிகண்டன்

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-நவ-202018:33:50 IST Report Abuse
ருத்ரா போற்றி பாதுகாக்க வேண்டிய அரிய பொக்கிஷங்கள். நம் அரசு ஆவன செய்ய வேண்டும். நம் தமிழகம் நமது கலாசாரம்.
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
23-நவ-202008:33:39 IST Report Abuse
Darmavanஎதை செய்வதற்கு லஞ்சம் யார் கொடுப்பான்.இல்லை கொள்ளை அடிக்க மத்திய அரசு நிதி கொடுக்க வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X