பொது செய்தி

தமிழ்நாடு

என்.எல்.சி.,யில் ரகசிய ஓட்டெடுப்பு: தொழிலாளர் நல ஆணையர் அனுமதி

Added : நவ 22, 2020
Share
Advertisement
நெய்வேலி : என்.எல்.சி.,யில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ரகசிய ஓட்டெடுப்பை நடத்துவதற்கு மத்திய தொழிலாளர் நல ஆணையர் அனுமதிவழங்கியதையடுத்து விரைவில் தேர்தல் நடக்க உள்ளது.கடலுார் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.,இந்தியா நிறுவனத்தில்3,500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் 8,500க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தொழிலாளர்கள் கோரிக்கைகள் மற்றும்

நெய்வேலி : என்.எல்.சி.,யில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ரகசிய ஓட்டெடுப்பை நடத்துவதற்கு மத்திய தொழிலாளர் நல ஆணையர் அனுமதிவழங்கியதையடுத்து விரைவில் தேர்தல் நடக்க உள்ளது.

கடலுார் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.,இந்தியா நிறுவனத்தில்3,500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் 8,500க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தொழிலாளர்கள் கோரிக்கைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது போன்ற அம்சங்கள் குறித்து நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தும் தொழிற் சங்கத்தை தொழிலாளர்கள் ரகசிய ஓட்டெடுப்பு வாயிலாக தேர்வு செய்வர்.இதில் 51 சதவீத ஓட்டுக்களை பெறும் தொழிற்சங்கம் என்.எல்.சி.,நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் அங்கீகாரத்தை பெறும். 4 ஆண்டுகளுக்குஒரு முறை ரகசிய ஓட்டெடுப்பு நடத்தப்படும்.
அந்த வகையில் கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த ரகசிய ஓட்டெடுப்பில் தொ.மு.ச.,மற்றும் சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கங்கள் இணைந்து 51 சதவீதத்திற்கு அதிகமான தொழிலாளர்களின் ஓட்டுக்களை பெற்று கடந்த 4 ஆண்டுகளாக நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்.கடந்த ஏப்ரலில் நடக்க வேண்டிய ரகசிய ஓட்டெடுப்பு கொரோனா தொற்று காரணமாக நடத்த முடியாமல் போனது. தற்போது கொரோனா தாக்கம் குறைய துவங்கியதால் என்.எல்.சி.,யில் ரகசிய ஒட்டெடுப்பு நடக்க உள்ளது.தொ.மு.ச.,பேரவை பொதுச்செயலர் சண்முகம் மத்திய தொழிலாளர் நல ஆணையத்தை தொடர்ந்து வலியுறுத்தியதால் என்.எல்.சி.யில் ரகசிய வாக்கெடுப்பு தேர்தலை, நடத்த மத்திய தொழிலாளர் நல ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார்.

என்.எல்.சி.,நிறுவனமும் ரகசிய ஓட்டெப்பை நடத்த தயாராக இருப்பதால் விரைவில் என்.எல்.சி.,யில் ரகசிய ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.சட்டசபை தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே என்.எல்.சி.,ரகசிய ஓட்டெடுப்பு மற்றும் தொ.மு.ச., உட்கட்சி தேர்தல் என 2 தேர்தல்கள் நடக்க உள்ளதால் நெய்வேலியில் தேர்தல் பரபரப்பு களைகட்ட துவங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X