சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் குழந்தை விற்பனை? கடத்தப்பட்டதாக தாய் புகார்

Added : நவ 22, 2020
Share
Advertisement
புதுக்கோட்டை : பிறந்து, 15 நாளே ஆன பெண் குழந்தையை, தாய் விற்றதாக எழுந்த புகாரில், திடீர் திருப்பமாக, குழந்தை கடத்தப்பட்டதாக, போலீசில் தாய் புகார் அளித்துள்ளார்.புதுக்கோட்டை, விராலிமலை அருகே, வேலுாரைச் சேர்ந்தவர் ஹாஜீ முகமது, 32; மனைவி ஆமீனாபேகம், 26.ஹாஜீமுகமது, திருச்சியில் உணவு விடுதியில் மாஸ்டராக வேலை பார்க்கிறார். இவர்களுக்கு, இரு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை

புதுக்கோட்டை : பிறந்து, 15 நாளே ஆன பெண் குழந்தையை, தாய் விற்றதாக எழுந்த புகாரில், திடீர் திருப்பமாக, குழந்தை கடத்தப்பட்டதாக, போலீசில் தாய் புகார் அளித்துள்ளார்.

புதுக்கோட்டை, விராலிமலை அருகே, வேலுாரைச் சேர்ந்தவர் ஹாஜீ முகமது, 32; மனைவி ஆமீனாபேகம், 26.ஹாஜீமுகமது, திருச்சியில் உணவு விடுதியில் மாஸ்டராக வேலை பார்க்கிறார். இவர்களுக்கு, இரு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளன.
இந்நிலையில், கடந்த, 2ம் தேதி ஆமீனாவுக்கு, மணப்பாறை அரசு மருத்துவமனையில், நான்காவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.பிறந்து, 15 நாளே ஆன பெண் குழந்தையை, தாய் ஆமீனா, 1 லட்சம் ரூபாய்க்கு, கண்ணன் என்பவரிடம் விற்றதாக, புதுக்கோட்டை சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் வந்தது.அவர்கள் அளித்த புகாரின்படி, விராலிமலை போலீசார், ஆமீனாவிடம் விசாரித்தனர். ஆனால், குழந்தையை, கண்ணன் என்பவர் கடத்தி விற்பனை செய்து விட்டதாக, சைல்டு லைன் அமைப்பினரிடம் ஆமீனா புகார் அளித்தார்.அதில் கூறியிருப்பதாவது:
என் குடும்ப வறுமைக்கு உதவி செய்வதாக கூறி, 1 லட்சம் ரூபாய் கொடுத்து, என் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறி, ஈரோட்டைச் சேர்ந்த பெண்ணிடம் கண்ணன் என்பவர் கொடுத்து விட்டார்.நான் என்ன செய்வது என தெரியாமல், பணத்துடன் வீட்டுக்கு வந்து விட்டேன். கடத்தப்பட்ட என் குழந்தையை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, நேற்று, விராலிமலை போலீசிலும் ஆமீனா புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, குழந்தையை கடத்தியதாக கூறப்படும் கண்ணன் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த பானு என்ற பெண்ணை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X