சம்பவம் செய்தி

தமிழ்நாடு

7 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை: 5 சிறுவர்கள் கைது

Added : நவ 22, 2020
Share
Advertisement
மயிலாடுதுறை : சீர்காழி அருகே, 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த, ஐந்து சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.நாகை மாவட்டம், சீர்காழி அருகே, வடகால் கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்த, 7 வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை, வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார்.அதே பகுதியைச் சேர்ந்த, 11 - 12 வயதுடைய ஐந்து சிறுவர்கள் சேர்ந்து, அச்சிறுமியை அருகில் உள்ள வீட்டுக்கு துாக்கிச் சென்று,

மயிலாடுதுறை : சீர்காழி அருகே, 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த, ஐந்து சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம், சீர்காழி அருகே, வடகால் கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்த, 7 வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை, வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார்.அதே பகுதியைச் சேர்ந்த, 11 - 12 வயதுடைய ஐந்து சிறுவர்கள் சேர்ந்து, அச்சிறுமியை அருகில் உள்ள வீட்டுக்கு துாக்கிச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இரவு வீடு திரும்பிய சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக சிறுமியை, சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பெற்றோர் புகாரின்படி, புதுபட்டினம் போலீசார் நேற்று, 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து, ஐந்து சிறுவர்களையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X