சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயத்தில் நஷ்டம்: தாய், மகன் தற்கொலை

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருச்சி : விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்ட விரக்தியில், தாயும், மகனும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.திருச்சி, மாம்பழச்சாலை அருகே, கணபதி நகரில், வாடகை வீட்டில் வசித்தவர் செல்லம்மாள், 65; மகன் ரமேஷ் பாபு, 40. இவர்கள், கொண்டையம்பேட்டை பகுதியில், நிலங்களை குத்தகைக்கு எடுத்து, விவசாயம் செய்து வந்தனர்.'கஜா' புயலின் போது, 10 ஏக்கரில் போட்டிருந்த வாழைகள் சேதமடைந்து, பெரும்

திருச்சி : விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்ட விரக்தியில், தாயும், மகனும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி, மாம்பழச்சாலை அருகே, கணபதி நகரில், வாடகை வீட்டில் வசித்தவர் செல்லம்மாள், 65; மகன் ரமேஷ் பாபு, 40. இவர்கள், கொண்டையம்பேட்டை பகுதியில், நிலங்களை குத்தகைக்கு எடுத்து, விவசாயம் செய்து வந்தனர்.'கஜா' புயலின் போது, 10 ஏக்கரில் போட்டிருந்த வாழைகள் சேதமடைந்து, பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். அடுத்தடுத்து விவசாயம் செய்தபோதும், நஷ்டமே ஏற்பட்டுள்ளது. திருவானைக்காவலில் இருந்த, தங்களது வீட்டை விற்று, விவசாயம் செய்துள்ளனர்.
வாழை விளைச்சல் அதிகம் இருந்தும், கொரோனா ஊரடங்கால், விலை இல்லாமல் போய்விட்டது. இருந்தும் மனம் தளராமல், தற்போது, 3.5 ஏக்கர் குத்தகைக்கு எடுத்து, வாழை, நெல் பயிரிட்டனர். இதற்காக, பலரிடம் கடன் வாங்கி உள்ளனர்.சமீபத்தில் பெய்த தொடர் மழையில் நெல்லும், வாழையும் சேதம் அடைந்தன.
விவசாயத்தில் தொடர் நஷ்டம், கடன் பிரச்னையால் விரக்தி அடைந்த செல்லம்மாளும், ரமேஷ் பாபுவும், நேற்று அதிகாலை விஷம் குடித்து, தற்கொலை செய்து கொண்டனர்.ஸ்ரீரங்கம் போலீசார் விசாரிக்கின்றனர். ரமேஷ்பாபுவுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 11 மாத கைக்குழந்தை உள்ளது. மனைவி, தீபாவளிக்காக பெற்றோர் வீட்டுக்கு சென்ற நேரத்தில், இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X