மாடர்னா தடுப்பூசியை கொள்முதல் செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீவிரம்

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பிராங்க்பர்ட்: அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னாவிடம் கொரோனா தடுப்பூசியை 1,800 ரூபாய்க்கு குறைவான விலையில் வாங்க ஐரோப்பிய ஒன்றியம் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளில் சிலவற்றில் கொரோனா இரண்டாவது அலை பரவல் ஆரம்பித்துள்ளது. இனி ஊரடங்கு போட்டால்
Moderna,  Dose, CovidVaccine, கொரோனா, மாடர்னா, தடுப்பூசி, தடுப்பு மருந்து

பிராங்க்பர்ட்: அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னாவிடம் கொரோனா தடுப்பூசியை 1,800 ரூபாய்க்கு குறைவான விலையில் வாங்க ஐரோப்பிய ஒன்றியம் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளில் சிலவற்றில் கொரோனா இரண்டாவது அலை பரவல் ஆரம்பித்துள்ளது. இனி ஊரடங்கு போட்டால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் தடுப்பூசியை பெறுவதில் முனைப்பு காட்டி வருகின்றன. மாடர்னா எனும் அமெரிக்க நிறுவனம் கொரோனா தடுப்பூசி உருவாக்கியுள்ளது. 30 ஆயிரம் பேருக்கு அம்மருந்து செலுத்தி சோதனை செய்யப்பட்டது. 94.5% அளவுக்கு பயனுள்ளதாக இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் வாரங்களில் அமெரிக்காவில் அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு மாடர்னா மற்றும் பைசர் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிக்க உள்ளனர்.


latest tamil news


இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியமும் மாடர்னா தடுப்பூசியை கொள்முதல் செய்ய உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை ஜூலை மாதமே தொடங்கிவிட்டது. தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஜெர்மன் இதழுக்கு பேட்டியளித்த மாடர்னா நிறுவனத்தின் சி.இ.ஒ., ஸ்டீபன், “தடுப்பூசி ஒன்றின் விலை அவர்கள் வாங்கும் அளவை பொருத்து ரூ.1,800 முதல் ரூ.2,700 வரை இருக்கும்” என்றார். ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் ரூ.1,800-க்கும் குறைவான விலைக்கு எதிர்பார்க்கிறது. இன்னும் சில தினங்களில் ஒப்பந்தம் இறுதியாகும் என்று பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-நவ-202019:45:00 IST Report Abuse
ஆரூர் ரங் 😎சுடலைதான் உலகத்தின் கொள்முதல் ஸ்பெஷலிஸ்ட் 😛கொள்முதல்..கொள்முதல் கொள்முதல்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X