சின்னமனுார் : சின்னமனுாரில் வேளாண்துறை சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
வேளாண் உதவி இயக்குநர் பாண்டி தலைமை வகித்தார். தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் சையது முகமது நகீப், திட்டம் குறித்து விளக்கினார். தோட்டக்கலை உதவி இயக்குநர் கார்த்திக்ராஜா ஒருங்கிணைந்த பண்ணையத்தில் பழப்பயிர்கள் மேலாண்மை முறை குறித்தும், மத்திய மற்றும் மாநில திட்டங்கள் குறித்து வேளாண் அலுவலர் கருணாநிதி பேசினர். தீவனப்பயிர்கள் மற்றும் மரப்பயிர்கள் குறித்து ஒருங்கிணைந்த பண்ணையத்தில் தொழில்நுட்ப மேலாளர் அருண்ராஜ், விற்பனை மற்றும் வேளாண் வணிகம் குறித்து உதவி வேளாண் அலுவலர் பாலசந்தர் விளக்கி பேசினர். துணை வேளாண் அலுவலர் புகழேந்தி மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE