சட்டசபை தேர்தல் பணிகள் ஆயத்தம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை தேர்தல் பணிகள் ஆயத்தம்

Added : நவ 22, 2020
Share
தேனி : தேனி மாவட்டத்தில் நகரம், ஒன்றியம் வாரியாக சட்டசபை தேர்தல் பணிகளை துவக்க அரசியல் கட்சியினர் நிர்வாகிகள், தொண்டர்களை தயார்படுத்துகின்றனர்.தமிழக சட்டசபை பொதுத்தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளில் தேனிமாவட்ட அரசியல்கட்சியினர் ஆர்வம் காட்டிவருகின்றனர். மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் தற்போது அ.தி.மு.க., தி.மு.க., இரு எம்.எல்.ஏ.,க்களுடன் சமபலத்தில் உள்ளன. இரு கட்சிகளும் 4

தேனி : தேனி மாவட்டத்தில் நகரம், ஒன்றியம் வாரியாக சட்டசபை தேர்தல் பணிகளை துவக்க அரசியல் கட்சியினர் நிர்வாகிகள், தொண்டர்களை தயார்படுத்துகின்றனர்.
தமிழக சட்டசபை பொதுத்தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளில் தேனிமாவட்ட அரசியல்கட்சியினர் ஆர்வம் காட்டிவருகின்றனர். மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் தற்போது அ.தி.மு.க., தி.மு.க., இரு எம்.எல்.ஏ.,க்களுடன் சமபலத்தில் உள்ளன. இரு கட்சிகளும் 4 தொகுதிகளையும் கைப்பற்ற முனைப்பு காட்டி வருகின்றன.
அ.தி.மு.க.வில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கைலாசப்பட்டி பண்ணை வீட்டில் வாக்காளர் சேர்க்கை முகாம்களில் எவ்வாறு தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என ஆலோசனை வழங்கி உற்சாகப்படுத்தினார். தி.மு.க. தேனியை இரு மாவட்டமாக பிரித்து 2 தொகுதி வீதம் பொறுப்பாளர்களை நியமித்து உள்ளது. இதில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன், புதுவரவு அறிமுக கூட்டம், ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை, முப்பெரும் விழா, வாக்காளர் சிறப்பு முகாம் ஆலோசனை என அடிக்கடி கூட்டம் நடத்தி கட்சியினரை தயார் படுத்துகிறார்.
தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ராமகிருஷ்ணனும் இதே போல் நிர்வாகிகள் கூட்டங்களை நடத்துகிறார். காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தியது, வேல் யாத்திரை அனுமதி மறுப்பு கண்டித்து பா.ஜ. ,போராட்டம், இளைஞர் அணி ஆலோசனை, வேல் வரைதல் என கடவுள் வழிபாடுகளுடன் தேர்தல் பணிகளையும் நடத்துகிறது. அ.ம.மு.க., உள்ளிட்ட மற்ற கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X