செம்மறி ஆடுகள் வளர்ப்பு அதிகரிப்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
பெரியகுளம் : பெரியகுளம் தாலுகா பகுதியில் செம்மறி ஆடுகள் அதிகம்வளர்க்கப்பட்டு கேரளாவிற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.இதனால் விவசாயத்துடன் இணைந்து ஆடு வளர்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.பெரியகுளம் தாலுகா பகுதிகளில் விவசாயிகளில் சிலர் ஆடு வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜல்லிபட்டி, சருத்துப்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகளை

பெரியகுளம் : பெரியகுளம் தாலுகா பகுதியில் செம்மறி ஆடுகள் அதிகம்வளர்க்கப்பட்டு கேரளாவிற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.இதனால் விவசாயத்துடன் இணைந்து ஆடு வளர்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பெரியகுளம் தாலுகா பகுதிகளில் விவசாயிகளில் சிலர் ஆடு வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜல்லிபட்டி, சருத்துப்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகளை வளர்ந்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் லட்சுமிபுரம் கரிசல்குளத்தில் புல்கள் அதிகம் வளர்ந்துள்ளது. இதனால் நுாற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள் மேய்கிறது.
ஆடு வளர்க்கும் மொக்கையன் கூறியதாவது:
செம்மறி ஆடு இறைச்சிக்கு கேரளாவில் அதிகம் மவுசு உள்ளதால் அவற்றை வாங்கிச் செல்கின்றனர். விவசாயத்துடன்இணைந்து ஆடு வளர்ப்பதால் எளிதாக உள்ளது. எடைக்கு தகுந்தாற் போல் 15 கிலோ முதல் 20 கிலோ வரை ஆடுகிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்கப்படுகிறது.விற்பனை அடிப்படையில் மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை கிடைக்கிறது. இதனால் ஆர்வம் அதிகரித்துள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X