நிதி நெருக்கடியால் ஊராட்சிகள் திணறல்

Added : நவ 22, 2020
Share
Advertisement
கம்பம் : மாவட்டத்தில் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் ஊராட்சிகள் திணறி வரும் நிலையில், மத்திய அரசின் குடிநீர் திட்ட ஜல் ஜீவன் மிஷன் நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் எடுத்துக்கொள்ள கலெக்டர் பல்லவிபல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.கொரோனா பரவல் காரணமாக மார்ச் முதல் கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் அனுமதிக்கப்படவில்லை. ஏப்ரல் முதல் ஊராட்சிகளுக்கு வழங்கும் மாநில



கம்பம் : மாவட்டத்தில் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் ஊராட்சிகள் திணறி வரும் நிலையில், மத்திய அரசின் குடிநீர் திட்ட ஜல் ஜீவன் மிஷன் நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் எடுத்துக்கொள்ள கலெக்டர் பல்லவிபல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் முதல் கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் அனுமதிக்கப்படவில்லை. ஏப்ரல் முதல் ஊராட்சிகளுக்கு வழங்கும் மாநில நிதிக்குழு மானியம் ஒதுக்கப்படவில்லை. இதனால் மின்கட்டணம் உள்ளிட்ட அடிப்படை பராமரிப்பு பணிகள் செய்ய நிதி இல்லாமல் ஊராட்சிகள் திண்டாடி வருகின்றன.இதனிடையே கலெக்டர் உத்தரவுப்படி ஏப்ரலில் ஜல் ஜீவன் நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் எடுத்து சமாளித்தனர். அதன்பின் தற்போது வரை 6 மாதங்களுக்கு மாநில நிதிக்குழு உள்ளிட்ட எந்த மானியமும் மாநில அரசால் அனுமதிக்கப்படவில்லை.
இதனால் ஊராட்சிகள் மீண்டும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளன. இந்நிலையில் பிரச்னையை சமாளிக்க ஜல் ஜீவன் திட்ட நிதியிலிருந்து மேலும் ரூ. 2 லட்சம் எடுத்துக் கொள்ளவும், மாநில நிதிக்குழு மானியம் அனுமதிக்கப்பட்டவுடன் அந்த நிதியை அதில் சேர்க்கவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் நடக்கின்றன. இதன் காரணமாக கிராம ஊராட்சிகள் அவற்றின் பணியாளர் சம்பளம் வழங்குதல், மின்கட்டணம் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கு நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X