ஆண்டிபட்டியில் வறண்டுள்ள நீர்நிலைகள்

Added : நவ 22, 2020
Share
Advertisement
ஆண்டிபட்டி : சில மாதமாக மழை பெய்தும் ஆண்டிபட்டி பகுதி குளம், கண்மாய்களில் நீர் தேங்கவில்லை. நிலத்தடி நீர் ஆதாரம் பாதித்து இறவை பாசன விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே குள்ளப்பகவுண்டன்பட்டி முல்லைப்பெரியாற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவந்து இவற்றில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆண்டிபட்டி ஒன்றியத்தில் இரு



ஆண்டிபட்டி : சில மாதமாக மழை பெய்தும் ஆண்டிபட்டி பகுதி குளம், கண்மாய்களில் நீர் தேங்கவில்லை. நிலத்தடி நீர் ஆதாரம் பாதித்து இறவை பாசன விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே குள்ளப்பகவுண்டன்பட்டி முல்லைப்பெரியாற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவந்து இவற்றில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆண்டிபட்டி ஒன்றியத்தில் இரு நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளன. தென்மேற்கு, வடகிழக்கு பருவமழையை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரி விவசாயம் நடைபெறும்.வருஷநாடு மலையில் இருந்து வரும் வைகை ஆற்றின் நீர் வரத்தால் கரையோரங்களில் சில நுாறு ஏக்கர் மட்டுமே பலன்பெறுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் நாகலாறு ஓடையால் தெப்பம்பட்டி, கொத்தப்பட்டி, பிச்சம்பட்டி, ஆசாரிபட்டி, ஜம்புலிப்புத்துார், ரெங்கசமுத்திரம் கண்மாய்களுக்கு நீர் கிடைக்கும்.தண்ணீர் தேங்கவில்லை
இந்தாண்டில் இதுவரை பெய்த மழையால் சிறு குளங்கள் உட்பட எந்த கண்மாயிலும் நீர் தேங்கவில்லை. வருஷநாடு வைகை ஆற்றில் இருந்து துரைச்சாமிபுரம் கால்வாய் வழியாக நீர் வரத்து இல்லாததால் மரிக்குண்டு, பாலசமுத்திரம், ரெங்கசமுத்திரம் கண்மாய்களுக்கும் நீர் கிடைக்கவில்லை. கண்மாய்களில் நீர் தேங்கினால் நேரடி பாசனத்தில் ஒரு போகம் எடுப்பதுடன், நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படும். இதை பயன்படுத்தி அடுத்த போகம் பயிர்செய்வர்.
விவசாயிகள் கூறியதாவது:
கேள்விக்குறி
ஆர்.டி.சரவணன், ஏத்தக் கோவில்:
ஆண்டிபட்டி ஒன்றியத்தில் பொதுப்பணித்துறை கண்மாய்கள் 21, குளங்கள் 40, 200-க்கும் மேற்பட்ட ஊருணிகள் உள்ளன. இப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமான இவை நிரம்பி 15 ஆண்டுக்கும் மேலாகிறது. இதற்கான நீர் வரத்து கால்வாய்களும் பராமரிப்பின்றி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குறைவான மழையால் கண்மாய், குளங்களில் நீர் தேங்காமல் நிலத்தடி நீர் ஆதாரம் பாதித்து விவசாயம் கேள்விக்குறியாகி விட்டது. குள்ளப்பகவுண்டன்பட்டி முல்லைப்பெரியாற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவந்து இங்குள்ள நீர்நிலைகளில் நிரம்பும் திட்டத்தை ஆண்டிபட்டி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். மண் வளம் மிக்க இப்பகுதியின் விவசாயத்தை காக்க அது சிறந்த தீர்வாகும். அதில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிப்பு
ஏ.செல்லத்துரை, கே. காமாட்சிபுரம்: ஆண்டிபட்டி ஒன்றியத்தில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடிநீர் மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழே சென்றதால் இறவை பாசனத்தில் விவசாயம் செய்ய முடியவில்லை. மானாவாரி விவசாயமும் கேள்விக்குறியாகி விட்டது. ஆயிரக்கணக்கான விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இப்பகுதியில் விவசாயம் மேம்படுவதற்கான முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதனால் மற்ற பகுதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. உபரி நீரை மட்டுமே கொண்டு வந்தலே நிலத்தடிநீர் ஆதாரம் மேம்பட வழி கிடைக்கும்.------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X