பொது செய்தி

தமிழ்நாடு

ரஜினிக்கு காய்ச்சல் என்பது வதந்தியே: பி.ஆர்.ஓ விளக்கம்

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்துக்கு காய்ச்சல் என்பது, யாரோ விஷமிகள் கிளப்பிவிட்ட வதந்தி என, அவருடைய மக்கள் தொடர்பாளர் (பிஆர்ஓ) ரியாஸ் அகமது தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‛அண்ணாத்த' திரைப்படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது. இதற்கிடையே அரசியலுக்கு வர ஆயத்தமான ரஜினியிடம், வயது முதிர்வு மற்றும் சிறுநீரக அறுவை
ரஜினி, காய்ச்சல், வதந்தி, பிஆர்ஓ

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்துக்கு காய்ச்சல் என்பது, யாரோ விஷமிகள் கிளப்பிவிட்ட வதந்தி என, அவருடைய மக்கள் தொடர்பாளர் (பிஆர்ஓ) ரியாஸ் அகமது தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‛அண்ணாத்த' திரைப்படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது. இதற்கிடையே அரசியலுக்கு வர ஆயத்தமான ரஜினியிடம், வயது முதிர்வு மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை ஆகியவற்றை காரணம் காட்டி தற்போது அரசியல் பிரவேசம் கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கடிதம் வெளியானது. ஆனால் கடிதம் தான் வெளியிட்டது இல்லை என ரஜினி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், டாக்டர்கள் தனக்கு அளித்த அறிவுரைகள் உண்மை எனவும், தெரிவித்திருந்தார்.


latest tamil news


இந்நிலையில், சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரஜினியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜினிக்கு காய்ச்சல் எனவும், அவருக்கு பண்ணை வீட்டில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து, இன்று (நவ. 22) தனியார் தொலைக்காட்சிக்கு விளக்கமளித்த ரஜினியின் பிஆர்ஓ ரியாஸ் அகமது, ‛நடிகர் ரஜினிகாந்திற்கு காய்ச்சல் என பரவும் தகவலில் உண்மை இல்லை. இது யாரோ விஷமிகள் கிளப்பிவிட்ட வதந்தி; அவர் போயஸ்கார்டன் வீட்டில் தான் இருக்கிறார்,' என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-நவ-202003:49:22 IST Report Abuse
J.V. Iyer அமைச்சர் அமித்ஷா வை சந்திக்காமல் இருப்பதற்கு இது ஒன்றுதான் வழி. அவர் படங்கள் ஓடுவதற்குத்தான் அப்பப்ப அரசியல் எனும் பூச்சாண்டி காட்டுவார். இவரால் தமிழகம் விடியும் என்று நம்பினோம்.
Rate this:
Cancel
திருட்டு  திராவிடன் எது வந்தால் என்ன வராவிட்டால் என்ன.
Rate this:
Cancel
Raj - Chennai ,இந்தியா
22-நவ-202022:38:31 IST Report Abuse
Raj ஹி isn’t willing to fell prey to பிஜேபி பவர் starving. There’s no information about corruption, டாஸ்மாக்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X