அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் வருகிறது., புறப்படுவோம் கோவிலுக்கும், மடத்திற்கும்.,

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (73+ 114)
Share
Advertisement
மயிலாடுதுறை: சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் தி.மு.க. இளைஞரணி செயலர் உதயநிதி பிரசாரத்தை துவக்கி உள்ளார். வெற்றி கிடைக்க வேண்டி அவர் தருமபுரம் ஆதீன மடாதிபதியை சந்தித்து ஆசி பெற்றார்.மாநில அரசின் கெடுபிடிகளை தாண்டி உதயநிதி, கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் பிரசாரத்தை துவக்கினார். தொடர்ந்து நாகப்பட்டினத்தில் பிரசாரம் செய்தார். கொரோனா இருப்பதால் சமூக

மயிலாடுதுறை: சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் தி.மு.க. இளைஞரணி செயலர் உதயநிதி பிரசாரத்தை துவக்கி உள்ளார். வெற்றி கிடைக்க வேண்டி அவர் தருமபுரம் ஆதீன மடாதிபதியை சந்தித்து ஆசி பெற்றார்.



latest tamil news



மாநில அரசின் கெடுபிடிகளை தாண்டி உதயநிதி, கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் பிரசாரத்தை துவக்கினார். தொடர்ந்து நாகப்பட்டினத்தில் பிரசாரம் செய்தார். கொரோனா இருப்பதால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை என இவரது பிரசாரத்திற்கு போலீசார் தடை விதித்தனர். இருப்பினும் பிரசாரம் செய்தே தீருவேன் என வேனில் சென்றதால் போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இந்நிலையில் உதயநிதி, பிரசாரத்திற்கு இடையே, நேற்று (21 ம் தேதி) இரவில் , மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.


latest tamil news



அப்போது 27-வது குருமகா சந்நிதானம் உதயநிதிக்கு திருநீறு பூசி ஆசி வழங்கினார். தொடர்ந்து, தமிழ்க்கடவுள் சேயோன் (முருகன் பாமாலை) என்ற மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை தொகுத்தளித்த நூலினை தருமபுரம் ஆதீனம் வெளியிட உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.


latest tamil news




கருணாநிதியும் சென்ற மடம்


1972-ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீன கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டின்போது மறைந்த கருணாநிதி, தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகா சந்நிதானத்தை சந்தித்து ஆசிபெற்ற புகைப்படத்தை நினைவு பரிசாக உதயநிதிக்கு குருமகாசன்னிதானம் வழங்கினார்.

Advertisement




வாசகர் கருத்து (73+ 114)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
23-நவ-202013:04:43 IST Report Abuse
Dr. Suriya நேற்று தான் இவரை தான் கொண்ட கொள்கையில் உறுதியானவர் என்று கருத்து போட்டேன்.... மன்னிக்கவும் ...இவரும் ஒரு அரசியல் நடிகன் தான்...
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
23-நவ-202010:51:03 IST Report Abuse
Malick Raja விலைவாசி ஏற்றம்.. குறிப்பாக 35 விற்கவேண்டிய பெட்ரோல் இன்று ரூ 85. அமெரிக்க டாலரின் மதிப்பு நல்ல வளர்ச்சி ரூ 77. ஐ கடக்க இருக்கிறது இது இரண்டும்தான் நாட்டிற்கு இன்றியமையாத பொருளாதாரத்தின் முதுகெலும்பு.. இதை மறைக்க வேல் யாத்திரை .. இதுதான் இப்போது இப்போதைய தேவை.. உதய நிதி யாரை சந்தித்தாலும் சந்திக்கவிட்டாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை ..
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
23-நவ-202012:59:53 IST Report Abuse
Dr. Suriyaஅதே ரூபாய் 35 க்கு விற்க வேண்டிய காங்கிரஸ் ஆட்சியில் ரூபாய் 65 க்கு விட்டதே ... அத என்ன சொல்ல போறீங்க.....அப்போ வாங்கின சம்பளம் தான் ...கூலித்தொழிலாளி கூலியும் தான் இப்போ எல்லா மக்களும் வாங்குறாங்களா.. வாங்கும் திறன் அதிகரித்தால் விலைவாசியும் ஏறும் என்கிற அடிப்படை பொருளாதாரம் கூட தெரியாமல் இந்த கருத்து......
Rate this:
Cancel
M Moorthy - Singapore,சிங்கப்பூர்
23-நவ-202010:37:09 IST Report Abuse
M Moorthy தேர்தல் வந்தால் தீயமுக நாங்களும் இந்து தான் என்று வேடமிடுவார்கள் அப்புறம் கருப்பர் கூட்டம், திகவை ஆதரிப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X