பொது செய்தி

தமிழ்நாடு

தில்லாலங்கடி திமுக.,? : டிரெண்டிங்கில் விறுவிறு

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (60)
Share
Advertisement
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை விஜயம், திமுக., குறித்து அவரின் ஊழல் மற்றும் வாரிசு விமர்சனம் போன்றவற்றால் டுவிட்டரில் திமுக.,வை வசைபாடி வருவது டிரெண்ட் ஆனது.எதிர்வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கூட்டணி விவகாரம் மற்றும் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்காக மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று சென்னை வந்தார். கலைவாணர் அரங்கில் நடந்த பல்வேறு
அமித்ஷா_பயத்தில்_திமுக, திமுக, ஸ்டாலின், உதயநிதி, அமித்ஷா,

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை விஜயம், திமுக., குறித்து அவரின் ஊழல் மற்றும் வாரிசு விமர்சனம் போன்றவற்றால் டுவிட்டரில் திமுக.,வை வசைபாடி வருவது டிரெண்ட் ஆனது.

எதிர்வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கூட்டணி விவகாரம் மற்றும் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்காக மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று சென்னை வந்தார். கலைவாணர் அரங்கில் நடந்த பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கான விழாவில் பேசிய அவர், அலைக்கற்றை ஒதுக்கீட்டில், 2 லட்சம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான தி.மு.க.,வுக்கு, ஊழல் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?'' என கேட்டார். மேலும் வரும் சட்டசபை தேர்தலில், குடும்ப கட்சிகளையும், வாரிசு, ஜாதி அரசியலையும் ஒழித்து, தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவர்'' என்றார்.

அமித்ஷாவின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் இன்று(நவ., 22) டிரெண்ட் ஆனது. திமுக., ஊழல் மற்றும் வாரிசு அரசியல் பற்றி பலரும் விமர்சித்து கருத்துக்களாகவும், மீம்ஸ்களாகவும் பதிவிட்டு வருகின்றனர். திமுக., மீதான ஊழல் தொடர்பான விமர்சனத்திற்கு 2ஜி உள்ளிட்ட ஊழல்களையும், வாரிசு தொடர்பான அரசியலுக்கு உதயநிதி ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து கட்சியில் வழங்கப்பட்டு வரும் முன்னுரிமைகளை சுட்டிக்காட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #திருட்டுதிமுக என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.


latest tamil news




மேலும் தமிழகத்தில் அமித்ஷாவின் வருகை நிச்சயம் வரும் சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் அவரை பார்த்து திமுக., உள்ளிட்ட மற்ற கட்சியினருக்கு பயம் உண்டாகிவிட்டதாக கூறி #அமித்ஷா_பயத்தில்_திமுக என்ற ஹேஷ்டாக்கையும் டிரெண்ட் செய்கின்றனர். அதுமட்டுமல்லாது தருமபுரம் ஆதீனத்தை, திமுக.,வின் உதயநிதி சென்று சந்தித்து ஆசி பெற்றதையும் சுட்டிக்காட்டி திமுக.,வின் இரட்டை வேடம் என விமர்சனம் செய்து வருகின்றனர்.


திமுக., தலைவர் ஸ்டாலின் பதிலடி


அமித்ஷாவின் விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள ஸ்டாலின் : ''நாளொரு ஊழலும், பொழுதொரு கொள்ளையுமாக அரசு கஜானாவை சுரண்டிக் கொழுத்து, நான்காண்டுகள் ஆட்சி செய்த இரட்டையர்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, டில்லி சாணக்கியர், எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும், வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று கரடி பொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது.'' என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
24-ஏப்-202112:54:28 IST Report Abuse
ocean கரடி பொம்மை வாங்குவதற்கும் அதை கண்ணாடியில் பார்த்து தான் வாங்க வேண்டும் என்பதற்கும் என்னங்க சம்பந்தம். உங்கள் தோப்பனார் இப்படித்தான் எல்லாம் தெரிந்தவர் போல் அர்த்தமற்ற வார்த்தைகளை எதுகை மோனையில் கொட்டி மூடர்களை மேலும் சிந்திக்க விடாமல் பம்மாத்து வேலை பண்ணிக்கொண்டிருந்தார. அவரது தில்லாலங்கிடித்தனம் இப்போது செல்லுபடியாகாது.அதே ஸ்டைலில் நீங்கள் இப்போது பேசினால் முட்டாளிடம் கூட எடுபடாது.
Rate this:
Cancel
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
23-நவ-202017:32:45 IST Report Abuse
sankar திருட்டு பய திமுக டிரேடிங்கில் சுறு சுறு
Rate this:
Cancel
thangamani v n - Erode,இந்தியா
23-நவ-202011:17:32 IST Report Abuse
thangamani v n திருட்டுதிமுக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X